ராகு கேது பெயர்ச்சி: மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இந்த ராசியினருக்கு 2025ஆம் ஆண்டு வரை நிலைமை மோசம்!

ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றமும் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும். ஒரு கிரகமானது ராசியை மாற்றும் போது அந்த மாற்றம் 12 ராசிகளிலும் காணலாம்.

இந்த கிரக மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கின்றது. அந்த வகையில் ராகு-கேதுவின் பெயர்ச்சியானது இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 திகதி நடக்க இருக்கிறது.

இந்தப் பெயர்ச்சியில் ராகு, குரு பகவானின் மீன ராசியிலும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்க இருக்கிறார்கள். இந்தப் பெயர்ச்சியில் மீன ராசிக்காரர்களுக்கு எப்படியான பலன்கள் கொடுக்கப் போகிறது என்பதை விபரமாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

மீன ராசிக்காரர்களுக்கு….

மீன ராசியில் ராகு இருக்கிறார், ராசியின் ஏழாம் இடத்தில் ஏழாம் இடத்தில் கேது இருக்கிறார். ஏழாம் இடத்தில் கேது இருப்பதால் கும்பத்தில் சிக்கல் ஏற்படும், மனைவியுடன் சண்டைக்கு செல்லாமல் சேர்ந்து வாழ பழகுங்கள். இந்தக் காலக்கட்டத்தில் துஷ்ட சகவாசங்கள் ஏற்படும்.

ராசியில் ராகு இருப்பதால் மது பழக்கங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கும். மேலும், பெண்கள் மீது மோகம் அதிகரிக்கும். ராகு உங்களை இந்த மாதிரி நிறைய விடயங்களையும் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்பட வைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஒன்றரை வருடத்தில் உங்களுக்கு அதிஸ்ட காற்று வீசக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில் ராகு உங்களுக்கு அதிக துணிச்சலைக் கொடுக்கக்கூடியவர். ஊடகத்துறையில் இருப்பவர் பணம் கொட்ட வாய்ப்புகள் உண்டு. தொலைதொடர்பு துறையில் இருப்பவர்கள் செழிப்பாக இருப்பார்கள்.

உங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீர கருமாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடுகளை தொடர்வதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.