ஜோதிடத்தின் படி, குரு கிரகம் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறது. இப்படி குரு 12 ராசிகளின் சுழற்சியை முடிக்க 12 வருடங்கள் ஆகும். தற்போது, குரு மேஷ ராசியில் இருக்கிறது.
குரு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். அடுத்தாண்டு மே 1ஆம் தேதி வரை குரு மேஷத்தில் மட்டுமே இருக்கும். அதே சமயம் குருவின் சஞ்சாரத்திலும் மாற்றம் ஏற்படும். வரும் செப். 4ஆம் தேதி அன்று குரு, வக்ர நிலையில் மாறப்போகிறார்.
குருவின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, நிதி நிலை, திருமண வாழ்க்கை போன்றவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மறுபுறம், குருவின் வக்ர நிலை 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரப் போகிறார். குருவின் வக்ர நிலையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பதை இங்கு காணலாம்.
மேஷம்
குருவின் வக்ர சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தேவகுரு பிருஹஸ்பதி இந்த மக்களுக்கு அன்பாக இருப்பார் மற்றும் அளப்பரிய நன்மைகளை வழங்குவார். இவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழிலுக்கு நல்ல நேரம்.
மிதுனம்
குருவின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகளைத் தரும். அரசுப் பணிக்கான முயற்சியில் இருப்பவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு வெற்றி கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும்.
சிம்மம்
குருவின் வக்ர இயக்கம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். வேலை எளிதாக நடக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர நிலை மிகவும் மங்களகரமான நாட்களை ஆரம்பிக்கும். நீங்கள் பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வாழ்வில் செழுமையும் பெருமையும் பெருகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். ஒப்பந்தம் அல்லது ஆர்டரை முடிப்பதில் வெற்றி கிடைக்கும்.