இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 17 ஆம் நாள் புதன்கிழமை (2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி).
திருகோண நட்சத்திரம், மகர ராசி, பிரதமை திதி மிதுன ராசி – திருவாதிரை நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றையபலன்கள்
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பழைய கடன் பாக்கிகள் வட்டியுடன் வந்து சேரும். புரிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும். வாழ்க்கை துணை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். தந்தை வழி சொத்து சேர்க்கை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உடல், மன சோம்பல் மிகும். காரியங்களில் தடங்கல்கள் ஏற்படும். பணியிடங்களில் சிலருக்கு பிரச்சனை ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சராசரியான பொருள் வரவே இருக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார நிலை உயரும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் உடல், மனம் உற்சாகமாக இருக்கும். மனக்கவலைகள் தீரும். பொருளாதார கஷ்டங்கள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். நண்பர்களால் ஆதாயம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்று எதிர்பார்த்த பணம் வரவு உண்டாகும். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவார்கள். சகோதர வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் செல்வாக்கு உயரும். பெண்கள் வழியில் தாராள பொருள் வரவு ஏற்படும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்சனைகள் சுமூகமாக தீரும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிகனருக்கு இன்றைய தினம் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சகோதர வழி உறவுகள் உதவிகள் செய்வார்கள். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காரியங்கள் தடைகளின்றி நிறைவேறும்.
தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். நன்கு ஆலோசித்து புதிய முடிவுகளை எடுக்க வேண்டும். பொது வெளியில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளின் செயல்பாட்டால் லாபம் அதிகரிக்கும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்தது நிறைவேறும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி போடுவது நல்லது. நீண்ட நாள் நண்பர்களை சந்திப்பீர்கள். சிலர் தொலைதூர ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் சிறிது உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி நிமித்தமாக அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சராசரியான லாபமே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறக்க கடின முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் மன சங்கடங்கள் நீங்கும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். சுபகாரிய செலவுகள் உண்டாகும். அந்நிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். வெற்றிகரமான பொருள் வரவு இருக்கும்.