ஆட்டிப்படைக்கப்போகும் சனி – ராகு! தொட்டது எல்லாம் பொன்னாகும் ராசிகள்! தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள்: இன்றைய ராசிபலன்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 18 ஆம் நாள் வியாழக்கிழமை (2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி).

அவிட்டம் நட்சத்திரம், கும்பம் ராசி, துவிதியை திதி

கடக ராசி – புனர்பூச நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் நண்பர்களின் உதவியால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்களில் ஆதாயம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சுப காரிய முயற்சிகள் வெற்றி பெறும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்கள் அமோகமாக நடைபெறும். பெண்கள் வழியில் சிலருக்கு தனலாபம் ஏற்படும். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணியிடங்களில் சக ஊழியர்களால் நன்மை ஏற்படும். கொடுத்த கடன் தொகை திரும்ப வந்து சேரும். குழந்தைகளால் சிலருக்கு செலவுகள் ஏற்படும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். அரசாங்க ரீதியான காரியங்களில் இழுபறி உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் முன்னேற்றமான நாளாக இருக்கும். அரசாங்க ரீதியான உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். சிலருக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும். மொத்த கடன் திரும்ப கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

துலாம்:
துலாம் ராசிக்கு இன்றைய தினம் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் பெருகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் நீங்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். சகோதர வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் படபடப்பு இருக்கும். எந்த காரியத்தையும் சரிவர செய்ய முடியாமல் போகும். பண விவகாரங்களில் புதியவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படக்கூடும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். புதிய வீடு. வாகனம் வாங்கும் அமைப்பு பெறுவார்கள். சித்தர்களை சந்தித்து ஆசிகளை பெறுவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். வாரா கடன் வசூலாகும். மனதில் பதற்ற நிலை இருக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாரா வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பணத்தை சேமிக்க வேண்டும். சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.