திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்

திருமண வயதை தாண்டியும், திருமணம் ஆகாமல் இருக்கும் தங்களுடைய பிள்ளைகளை பார்க்கும் போது பெற்றவர்களுக்கு நிச்சயம் கவலை இருக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க எளிமையான பரிகாரம்: பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரு சின்ன கண்ணாடி பவுல் தேவை.

கொஞ்சமாக கல் உப்பு தேவை. ஒரு குண்டு மஞ்சள் தேவை. வழக்கம் போல பரிகாரம் செய்வதற்கு முன்பு பூஜை அறையில் விளக்கு ஏற்றி குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளவும்.

கல் உப்பு

ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து மனதார திருமணம் நடக்க வேண்டும் என்று சொல்லி அந்த கல் உப்பை, அந்த பவுலில் போடவும்.

அடுத்தபடியாக குண்டு மஞ்சளை உள்ளங் கைகளில் வைத்துக்கொண்டு மனதார திருமணம் நடக்க வேண்டும் என்று குலதெய்வத்திடும் பிரார்த்தனை செய்து அந்த உப்பின் மேல் வையுங்கள்.

மீண்டும் ஒரு கைப்பிடி கல்லுப்பை எடுத்து மீண்டும் ஒருமுறை மனதார திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து அந்த மஞ்சளுக்கு மேல் ஒரு கைப்பிடி கல்லுப்பை வைத்து மூடி விட வேண்டும்.

மஞ்சள்

கல் உப்புக்கு உள்ளே இருக்கும் குண்டு மஞ்சள் வெளியே தெரியக்கூடாது. இந்த கிண்ணத்தை பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும்.

இந்த பரிகாரத்தை திருமணம் ஆகாத குறிப்பிட்ட அந்த ஆண், பெண் செய்யலாம். அவர்களால் செய்ய முடியாது எனும் பட்சத்தில் பெற்றவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காக இந்த பரிகாரத்தை வேண்டி செய்யலாம்.

தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது இந்த பவுலில் இருக்கும் கல் உப்புக்கு ஊதுவத்தி காண்பித்து வரவும்.

கல்லுப்பையும் குண்டு மஞ்சளையும் வைத்து தினமும் சுப காரிய தடை விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் அந்த சுப காரிய தடையானது சீக்கிரம் விலகும் என்பது ஒரு நம்பிக்கை.

இதை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கும் வரை செய்ய வேண்டும்.