ஒரு வருடத்திற்கு பின் சிம்மம் செல்லும் புதன்: ஆகஸ்ட் 4 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் மிகப்பெரும் யோகம் – இன்றைய ராசிபலன்

ஜோதிடத்தில் கல்வி, வியாபாரம், புத்திசாலித்தனம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய நாட்களில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார்.

சிம்ம ராசிக்குள் நுழைந்த புதன், ஆகஸ்ட் மாதத்தில் சிம்ம ராசியில் வக்ரமாகிறார். முக்கியமாக புதன் சிம்ம ராசிக்குள் ஒரு வருடத்திற்கு பின் நுழையவுள்ளார்.

இதனால் புதனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சிம்மம் செல்லும் புதனால் 4 ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பண வரவிலிருந்த தடங்கல்கள் விலகும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையை அடைவார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகங்களில் இருப்பவர்களுக்கு அனுகூலங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார நிலை உயரும். பிறரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். எதிர்பாராத செலவுகள் சிலருக்கு ஏற்படும். வெளியூர்களில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பணம் தொடர்பான விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. பிறருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. சராசரியான பொருள் வரவு இருக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டு. வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். நண்பர்களால் பொருள் வரவு உண்டாகும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் நன்மைகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். பணியிடங்களில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் மனம் உற்சாகத்துடன் இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். சிலர் தொலைதூர ஆன்மீக தலங்களுக்கு செல்வார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பானதாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத லாபம் ஏற்படும். அரசாங்க ரீதியான உதவிகள் கிடைக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பொருளாதார நெருக்கடிகள் தீரும். சிலர் வெளிநாடு செல்லும் யோகம் பெறுவார்கள். திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் நீங்கும். உடலிலும், மனதிலும் உற்சாகம் ஏற்படும். வாகனங்கள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் இருந்த இழுப்பறி நிலை விலகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு பெறுவார்கள்.

மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. இனம் புரியாத கவலைகள் ஏற்படும். எதிர்பாராத வீண் விரயங்கள் இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செய்வதால் உடல் அசதி உண்டாகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும்.