கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் – வீடுகளின் விலைகளில் மாற்றம்

கனடாவின் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ள அதேவேளை, வீடுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வீடுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சராசரி விலை அதிகரிப்பு

ஜூலை மாதத்தில் சுமார் 5250 வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11.5 வீத வளர்ச்சி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் வீடுகளின் சராசரி விலையும் 4.2 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.