சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன்… பல யோகங்களுக்கு அதிபதியாபக் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

2023ஆம் ஆண்டு ஆரம்பித்து 8 மாதங்கள் ஆகின்றது. இந்த 7 மாதங்களும் பல கிரகங்கள் பெயர்ச்சியடைந்து பல நற்பயன்களும் பலருக்கு ஏற்ற பலன்களும் கிடைத்திருக்கும்.

அந்தவகையில் ஆகஸ்ட் மாதமும் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. அவையும் பலரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்நிலையில், சுக்கிர பகவான் இன்றிலிருந்து சிம்ம ராசியில் அஸ்தமனமாகிறார். இவரின் அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை பெறப்போகிறார்கள் அந்த ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

ரிஷபம்
ரிஷப ராசியை ஆளும் சுக்கிரனால் நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. இந்த காலக்கட்டத்தில் அவர்கள் விலையுயர்ந்த பெறுமதியான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி, நகைகளையும் வாங்க முடியும். பொருளாதாரத்திலும் நல்ல நிலைமை இருக்கும், நிதி நிலைமைகள் அமோகமாக இருக்கும் குடும்பத்திலும் அதிக மகிழ்ச்சி இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்குள் புதன் நுழைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். பெயரும் புகழும் பெற்று சீறும் சிறப்புமாக இருப்பார்கள். இழுத்தடித்துக் கொண்டிருந்த கடன் கைக்கு வந்து சேரும். தொழிலில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியுடன் அமையும்.

கடகம்
இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரப் பெயர்ச்சியானது சாதகமான பலன்களை கொடுக்கிறது. இந்த காலத்தில் உங்களிடம் மக்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஆளுமையும் விருத்தியடையும், பண முதலீடுகளில் அதிக இலாபம் கிடைக்கும். நீங்கள் ஆரம்பிக்கும் திட்டங்கள் எல்லாம் வெற்றிகரமாக இருக்கும். சிலருக்கு திருமணமும் கைகூடும்.