சிம்மத்தில் சுக்கிரன் – செவ்வாய் சேர்க்கை பல ராசிகளுக்கு சிறப்பான பலனைத் தர உள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு சிம்ம ராசியில் பெரிய கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகிறது.
இதன் காரணமாக மேஷம், கும்பம் உள்ளிட்ட இந்த 3 ராசிக்காரர்கள் செல்வந்தர்களாக மாறக்கூடிய சுப யோகம் ஏற்படுகிறது.
ஜூலை முதலாம் திகதி செவ்வாய் பகவானும் தொடர்ந்து, 7ம் திகதி சுக்கிரனும், நவகிரக தலைவன் சூரியனின் ராசியான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகினர். இந்த இரு கிரகங்களின் சேர்க்கை சிம்மத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்படுகிறது.
சோபகிருது வருடம் ஆடி மாதம் 20ஆம் நாள் சனிக்கிழமை (2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி).
பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, சதுர்த்தி திதி
சிம்ம ராசி – பூர நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் சிலருக்கு ஏற்படும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் இருந்த தடைகள் நீங்கும், வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். சமுதாயத்தின் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணியிடங்களில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குழந்தைகள் கல்வி கலைகளில் சிறப்பார்கள். கோர்ட், விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அரசாங்க ரீதியான உதவிகள் கிடைக்கும். தூரத்து உறவினர்களால் ஆதாயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். உணவு விடயங்களில் அக்கறை தேவை.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. பதட்டமான மனநிலை இருக்கும். கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படும். நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணியிடங்களில் பணிச்சுமை கூடும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் பொருள் வரவு இருக்கும். நேரடி, மறைமுக எதிரிகள் நீங்குவார்கள் உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பணம், புகழ் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு ஏற்படும். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் இழுபறி உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பிரச்சனை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சராசரியான லாபம் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் பணியிட மாறுதல் கிடைக்க பெறுவார்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சகோதர வழி உறவுகளால் பிரச்சனை ஏற்படும். புதிய மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் கல்வியில் பின் தங்கக்கூடும். எதிர்பாராத வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் பழைய கடன் பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மைகள் ஏற்படும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்தது நிறைவேறும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். தொழில், வியாபாரங்கள் விரிவடைந்து லாபம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவார்கள். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க பெறுவார்கள்.