பணக்காரராகும் வாய்ப்பை அள்ளி கொடுக்கப் போகும் சனி – நீங்கள் எந்த ராசி..! இன்றைய ராசிபலன்

இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 21ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி).

ரோஹினி நட்சத்திரம், மீன ராசி, பஞ்சமி திதி

சிம்ம ராசி – உத்தரம் நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்துவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் இழுபறி உண்டாகும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மறைமுக எதிரிகள் விலகுவார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் கொடுக்கல் – வாங்கல்களில் இருந்த பிரச்சனை தீரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு இருக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார நிலை மேம்படும். பெண்களால் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மனோதிடம் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களால் தனலாபம் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வாகனங்களில் பயணிக்கும் பொழுது கவனம் தேவை. தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி இருக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. சராசரியான பொருள் வரவு இருக்கும்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். நண்பர்களால் பொருள் வரவு ஏற்படும். உறவினர்களால் சிலருக்கு வீண்விரயம் உண்டாகும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத லாபம் இருக்கும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் உடலில் அசதி ஏற்படும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். வீட்டில் பெரியவர்களுக்கு வீண் மருத்துவ விரயம் ஏற்படும். புதிய காரிய முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது. வெற்றிகரமான பொருள் வரவு இருக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எதிரிகள் தொல்லை நீங்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். பிரிந்து சென்ற உறவினர்கள் உங்களை தேடி வருவர். சுபகாரிய முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் மன நிம்மதி இருக்கும். பழைய கடன்களை கட்டி முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபம் ஏற்படும். தாய் வழி சொந்தங்களால் ஆதாயங்கள் இருக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் சிறிய செலவுகள் ஏற்படும். புதிய நபர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சிலர் புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைக்க பெறுவார்கள்.