ஆட்டிப்படைக்கப்போகும் சனி – ராகு! தொட்டது எல்லாம் பொன்னாகும் ராசிகள்! தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள்: இன்றைய ராசிபலன்

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் சீரான இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரங்களையும் மாற்றும்.

அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது சதயம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.

இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 17ஆம் திகதி வரை பயணிப்பார். சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிப்பதால், சனி மற்றும் ராகுவால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு.

எனவே அக்டோபர் வரை சில ராசிக்காரர்கள் சனி – ராகுவால் மோசமான பலன்களை பெறுவார்கள். குறிப்பாக வாழ்வில் கஷ்டங்கள் அதிகரிக்கும் மற்றும் தொழிலில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.. தொழில், வியாபாரங்களில் இருந்த சங்கடங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் இருக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் புதிய சிந்தனைகள் தோன்றும். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நலம். நண்பர்களால் பொருள் வரவு இருக்கும். உணவு விடயங்களில் கவனம் தேவை. குழந்தைகள் வழியில் செலவுகள் ஏற்படும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் ஏமாற்றங்கள் ஏற்படலாம். பயணங்களால் வீண் அலைச்சல் இருக்கும். கொடுக்கல் – வாங்கல் களில் இழுபறி உண்டாகும். புதிய நபர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்த நிலை பெறுவார்கள்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்று மனோ தைரியம் அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் இருக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு பெருகும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்றைய தினம் பழைய கடன்களை வட்டியுடன் அடைப்பீர்கள். சிலர் குடும்பத்துடன் ஆன்மீக தலங்களுக்கு செல்வீர்கள். கலைத் தொழிலில் இருப்பவர்கள் வெளிநாடு செல்வார்கள். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமானதாக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் படபடப்பு ஏற்படும். வம்புகளில் ஈடுபடக் கூடாது. பணியிடங்களில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பணம் தொடர்பான விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் பூர்த்தியாகும். தம்பதிகளிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும், தொழில், வியாபாரங்களில் இருந்த தடைகள் நீங்கும். வித்தியாசமான சிந்தனைகளால் வெற்றிகளை பெறுவீர்கள்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் தன்னம்பிக்கை பெருகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நோய் பாதிப்புகள் விலகும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வுகள் பெறுவார்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகள் வெற்றியாகும். சக பணியாளர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு இருக்கும். திடீர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு தாராள தன வரவு ஏற்படும்.

கும்பம்:
கும்ப ராசியினர் இன்றைய தினம் திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் இருந்த எதிரிகள் விலகுவார்கள். அந்நிய நபர்களால் நன்மைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் தன வரவு இருக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் சிந்தனையிலும், செயல்களிலும் தெளிவு ஏற்படும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்பாராத பொருள் வரவு சிலருக்கு ஏற்படும்.