அமெரிக்காவிலும் பரவியது ‘கொவிட் 19’ வகை வைரஸ்

பிரிட்டனில் கண்டறியப்பட்ட ‘Eris – EG5’ ‘கொவிட் 19’ வகை வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது.

புதிதாக கண்டறியப்பட்ட ‘கொவிட்-19’ பாதிக்கப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் ‘Eris-EG.5’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத் துறை தகவல்கள் கூறுகின்றன.

‘ஓமிக்ரோன்’ வைரஸின் துணை வகை

‘Eris – EG.5’ என்பது கொவிட் 19 ‘ஓமிக்ரோன்’ வைரஸின் துணை வகையாகும்.

உலக சுகாதார அமைப்பும் ‘Eris – EG5’ துணை வகையை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.

கடந்த வாரம், ‘Eris – EG5’ கிளையினங்கள் குறித்து பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் எச்சரித்தனர். அப்போதுதான் நாட்டில் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியது.