சனியால் உருவாகியுள்ள ராஜயோகம்: மகிழ்ச்சிக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம் – இன்றைய ராசிபலன்

வேத ஜோதிடத்தில் சனி பகவானின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சனி பகவான் ராசியை மாற்ற இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

இதனால் சனி பகவானின் தாக்கம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அதிகமாகவே இருக்கும். மேலும் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.

அப்படி உருவாகும் யோகங்களும் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார்.

கும்ப ராசியில் சனி பகவான் நுழைந்ததால், கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கினார்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், அதிஷ்டத்தையும் பெறுவார்கள்.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் வருமானம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் சுமுகமாக தீரும். நண்பர்களால் ஆதாயம் இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் அமையும். தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர்கள். சொத்து விவகாரங்கள் நல்லபடியாக முடியும். பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி மாறுதல் பெறுவார்கள்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்தது செயல்படுத்த முடியாமல் போகும். புதிய முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். சராசரியான பொருள் வரவு இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் செயல்களில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். புதிய மனிதர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் கடன் பிரச்சனைகள் தீரும். எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பெண்களுக்கு சுப செய்தி வந்து சேரும். இழுபறியாக இருந்த செயல்கள் நல்லபடியாக முடியும். மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை பெருகும். பணியிடங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். உடன்பிறந்தோர் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரங்களை விரிவுபடுத்துவீர்கள்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் நெருக்கடிகள் தீரும். எதிரிகள் விலகுவார்கள். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். அந்நிய நபர்களால் ஆதாயம் இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் மனதில் பதட்டம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். காரியங்களில் தாமதங்கள் ஏற்படும். பணவரவுகளில் இழுபறி உண்டாகும். குடும்பத்தினருடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையானதை வாங்குவீர்கள். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் லாபங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் மிளிர்வார்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டு. உத்தியோகங்களில் சக ஊழியர்கள் உதவுவார்கள். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும். பொருளாதார நிலை உயரும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கலைத்தொழிலில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகள் பெறுவார்கள்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய மனிதர்களால் நன்மைகள் ஏற்படும். வாகனங்கள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும்.