இந்த 3 ராசியில் வரன் வந்தால் உங்க வாழ்க்கை அமோகமாக இருக்குமாம்.. இதில் உங்க ராசி இருக்கா?

பொதுவாக “ திருமணம் ” எனப்படுவது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற விடயம் என பெரியவர்கள் கூறுவார்கள்.

இதன் காரணமாக தான் திருமணம் என வரும் போது பெரியவர்கள் ஏகப்பட்ட பொருத்தங்கள் பார்க்கிறார்கள்.

இவ்வாறு பொருத்தங்கள், ராசிகள் என பார்த்து திருமணம் செய்து வைத்தால் அந்த தம்பதிகள் ஏழு ஜென்மங்களுக்கு ஒன்றாக வாழ்வார்கள் என பொருட்ப்படுகின்றது.

அந்த வகையில் திருமணங்களில் கண்டிப்பாக சேர வேண்டிய ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. சிம்ம ராசிக்காரர்கள்
இந்த ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக அச்சமற்ற தன்மை, நம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுவார்கள். உடை துவக்கம் அவர்கள் செல்லும் இடங்கள் வரை சரிவர இருக்க வேண்டும் என அதீத கவனத்துடன் இருப்பார்கள்.

துணையை தனக்கு இணையாக நடத்துவார்கள் இவர்கள் திருமண செய்ய போகும் ராசிக்காரர்கள் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும் என ஆசை கொள்வார்கள்.

2. ரிஷப ராசிக்காரர்கள்
தனக்கு பிடித்த நபரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் துயரம் என்பது மிக குறைவாக தான் இருக்கும். உறவு என பார்க்கும் போது மனைவியை அதிகமாக விரும்புபவர்களாக இருப்பார்கள்.

3. துலா ராசிக்காரர்கள்
துலா ராசிக்காரர்கள் தனிமையில் இருக்க விரும்பமாட்டார்கள். காதலருடன் வெளியில் செல்வதனை தயக்கம் கொள்வார்கள். தனது துணையின் உணர்வையும் மதிக்கதக்கவராக இருப்பார். அத்துடன் காதலர்களாக இருக்கும் போது மிகவும் உண்மையாக இருப்பார்கள்.