30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் பயணிக்கும் சனி: 2025 வரை கோடான கோடி அதிர்ஷ்டம் – இன்றைய ராசிபலன்

நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். இவர் ராசியை மாற்றுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

கிரகங்களிலேயே சனி பகவான் மெதுவாக நகர்வதால், இவர் ராசியை மாற்றும் போது அதன் தாக்கமானது சற்று அதிகமாக இருக்கும்.

இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். இந்த சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நுழைந்தார்.

இந்த கும்ப ராசியில் சனி பகவான் 2025ஆம் ஆண்டு வரை பயணிப்பார். இதனால் கும்ப ராசியில் பயணிக்கும் சனியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக கும்ப ராசியில் சனி பகவான் இருப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு வரை தொழிலில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உடன்பிறந்தோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரங்களில் இருக்கின்ற சவால்களை வெற்றி கொள்வீர்கள். சுபகாரிய விரயங்கள் ஏற்படும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் கொடுக்கல் – வாங்கல்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தாராள பொருள் வரவு இருக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் ஏற்படும். காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரங்களில் சராசரியான வருமானம் இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒரு சிலர் கடன் வாங்கும் நிலை உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது. கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். சிலர் ஆன்மீகத் தலங்களுக்கு செல்வார்கள். பூர்விக சொத்து விவகாரங்களில் நல்ல முடிவு கட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி மாறுதல் கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் ஈடேறும். பணியிடங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். புதிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் தீரும்.தாய்வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும்.

துலாம்:
துலாம் ராசியினர் இன்றைய தினம் நினைத்ததை சாதிப்பார்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பெண்களுக்கு நன்மைகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் இருக்கும். செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சவால்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த பண வரவில் தாமதங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். புதிய நபர்கள் உதவி செய்வார்கள்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தொலைதூர வாகன பயணங்களை தவிர்க்க வேண்டும். உணவு விடயங்களில் அக்கறை தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் இறையருள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வீட்டில் சுப காரிய பேச்சுக்கள் எழும். தம்பதிகளிடமிருந்து கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத தன லாபங்கள் இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏற்படும். சுப காரியம் முயற்சிகளில் தாமதங்கள் உண்டாகும். பெண்கள் வழியில் பொருள் வரவு இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களால் நன்மை ஏற்படும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் காரியங்களில் இழுப்பறி உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். ஒரு சிலருக்கு மருத்துவர் ரீதியான செலவுகள் உண்டாகும்.