வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஏனெனில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, சந்தோஷம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அனைத்துவிதமான சந்தோஷமும் கிடைக்கும் மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
மங்களகரமான கிரகமாக கருதப்படும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ராசியை மாற்றுவதற்கு சுமார் 23 நாட்கள் ஆகும்.
மேலும் சுக்கிரன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சுக்கிரன் ஆகஸ்ட் 7ஆம் திகதி சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்,
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காரிய தடைகள் விலகும். அதிகப்படியான பொருள் வரவு இருக்கும். வெளிநாடு செலலும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு தன லாபங்கள் இருக்கும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் நிறைவேறும். எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் குழப்பம் உண்டாகும். முயற்சிகளில் இழுபரி ஏற்படும். பிறரின் விடயங்களில் தலையிட வேண்டாம். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நலம். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத செலவுகள் இருக்கும். பணி நிமித்தமாக அலைச்சல்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிரமப்படுவார்கள். தொழில், வியாபாரங்களில் சராசரியான வருமானமே இருக்கும். எதையும் பொறுமையாக அணுக வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் வர வேண்டிய பணம் சரியாக வந்து சேரும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கலைத் தொழிலில் இருப்பவர்கள் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் விரும்பியது நிறைவேறும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி ஏற்படும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பப் பிரச்சினைகள் சமூகமாக தீரும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் லாபங்கள் இருக்கும். தொலைதூர ஆன்மீகத் தலங்களுக்கு செல்வீர்கள். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். வீண் கவலைகள் உண்டாகும். கொடுக்கல் – வாங்கல் களில் இழுபறி நிலை ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை தேவை.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். தொழில், வியாபாரங்களில் சிக்கல்கள் உருவாகும். சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் இருக்காது.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார நெருக்கடிகள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சகோதர உறவுகளால் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலருக்கு சுப விரய செலவுகள் ஏற்படும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் செலவுகள் கூடும். அந்நிய நபர்கள் உதவுவார்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். வாழ்க்கைத் துணை வழியில் பண வரவு இருக்கும். திடீர் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்கள் விரிவு பெறும். விருந்து, விசேடங்களில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.