ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. மேலும் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அதேப் போல் நட்சத்திரங்களையும் மாற்றும்.
அப்படி மாற்றும் போது சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதுண்டு. இப்படி நிகழும் சேர்க்கையால் சுப அல்லது அசுப தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது சதய நட்சத்திரத்தில் உள்ளார். இந்த சதய நட்சத்திரமானது ராகுவின் நட்சத்திரமாகும். சனியும், ராகுவும் இணைந்திருப்பதால், அதன் தாக்கம் சில ராசிகளில் சற்று மோசமாக இருக்கும்.
சனி பகவான் இந்த சதய நட்சத்திரத்தில் அக்டோபர் 17 வரை இருப்பார். இதனால் சனி ராகு சேர்க்கையால் அக்டோபர் 17 வரை சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்,
மேஷம்:
மேஷ ராசிக்கு இன்றைய தினம் செலவுகள் ஏற்படும். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதில் மட்டும் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இன்றைய தினம் சகோதரர் வழியில் லாபம் ஏற்படும். பிறருக்கு பணம் கொடுக்கும் பொழுது கவனம் தேவை. கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். தொழில் புரிவோர் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு இன்றைய தினம் புதிய அனுபவம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் கவனம் தேவை. உடல் நலம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சில தொல்லைகள் ஏற்படும்.
கடகம்:
கடக ராசிக்கு இன்றைய தினம் பண வரவுகளில் சுமுகமான நிலை இருக்கும். உறவினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். பணியிடங்களில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பயணத்தில் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இன்றைய தினம் பொதுமக்களின் ஆதரவு இருக்கும். புதிய முயற்சிகளில் சற்று இழுபறிக்கு பிறகு வெற்றி கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். உடன் பிறந்தோர் மூலம் நற்செய்தி வரும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். பயணத்தில் சற்று கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவெறும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்.
விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் வெளியிடத்தில் மரியாதை பெருகும். தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாடு பயண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பணத்தை கையாள்கையில் கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் கவலைகள் விலகும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். பிள்ளைகளால் நல்ல செய்தி வரும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் ஒரு சிலருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். கோர்ட் வழக்குகளில் இழுபறியான நிலை நீடிக்கும். புதிய காரியங்களை இன்று துவங்காமல் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் உயர்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்கள் மூலம் சிலருக்கு ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
மீனம்:
மீன ராசியினருக்கு லாபம் ஏற்படும். சிலர் பணியாளர்களால் புகழ் பெறுவார்கள். பெண்கள் வழியில் சிலருக்கு தனலாபம் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் புரிவோர் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.