ஆட்டிப்படைக்கப்போகும் சனி – ராகு! பல யோகங்களுக்கு அதிபதியாகப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இன்றைய ராசிபலன்

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் சீரான இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரங்களையும் மாற்றும்.

அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது சதயம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.

இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 17ஆம் திகதி வரை பயணிப்பார். சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிப்பதால், சனி மற்றும் ராகுவால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு.

எனவே அக்டோபர் வரை சில ராசிக்காரர்கள் சனி – ராகுவால் மோசமான பலன்களை பெறுவார்கள். குறிப்பாக வாழ்வில் கஷ்டங்கள் அதிகரிக்கும் மற்றும் தொழிலில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் பிறர் விடயங்களில் தலையிட வேண்டாம். கடும் முயற்சிகளுக்குப் பின் காரியம் வெற்றி பெறும். தாய் வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். தொழில், வியாபாரங்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசாங்க காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் கவனம் தேவை. வார்த்தைகளை விட வேண்டாம். புதிய நபர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வாகனங்கள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். சராசரியான பொருள் வரவு இருக்கும். ஆன்மீக தலங்களுக்கு செல்வீர்கள்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். பணிச்சுமை கூடும். சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு கூடும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் திடீர் செலவுகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையானவற்றை வாங்குவீர்கள். பிரிந்து சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். புதிய காரிய முயற்சிகளில் தாமதமான வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபம் இருக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார சிக்கல்கள் தீரும். வருமானம் பெருகும். தொழில், வியாபாரங்களில் புதிய முதலீடுகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நேரடி, மறைமுக எதிரிகள் விலகுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலை அடைவார்கள். தாராள பொருள் வரவு இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அடையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அந்நிய நபர்களால் ஆதாயம் இருக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சிலருக்கு கோபம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் தடங்கல்கள் ஏற்படும். சிலர் கடன் வாங்க கூடும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பண வரவுகளில் இழுபறி உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். மகான்களின் ஆசிகளை பெறுவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிரச்சனைகளை ஏற்படுத்தியவர்கள் விலகுவார்கள். பூர்வீக சொத்து விவகாரங்கள் நல்லபடியாக முடியும். வாராத கடன் தொகை வந்து சேரும். சகோதர வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலர் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.