வேத ஜோதிடத்தில் குரு பகவானுக்கும், சனி பகவானுக்கும் தனி இடம் உண்டு. இவ்விரு கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் தேவர்களின் குரு என்று அழைக்கப்படும் குரு பகவான் வக்ரமாகவுள்ளார்.
ஜோதிடத்தில் குரு பகவான் செழிப்பு, மகிழ்ச்சி, திருமணம், செல்வம் மற்றும் ஆன்மீகத்தின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்த குரு பகவான் செப்டெம்பர் மாதத்தில் மேஷ ராசியில் வக்ரமாகி பயணிக்கவுள்ளார். குரு பகவான் வக்ரமாவதால் செப்டெம்பர் மாதத்தில் இருந்து அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் தெரியும்.
முக்கியமாக சில ராசிக்காரர்கள் குரு வக்ரமாவதால் அட்டகாசமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் அரசாங்க காரியங்களில் தாமதங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்தி போட வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். சராசரியான வருமானம் இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவீர்கள். சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள். பெண்களால் தனலாபம் ஏற்படும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் இன்றைய தினம் துணிச்சல் உடன் செயல்படுவீர்கள். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் அரசாங்க ரீதியான உதவிகள் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு மருத்துவ ரீதியான செலவுகள் ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் குடும்ப பிரச்சனைகள் சுமுகமாக தீரும். புதிய நபர்களால் நன்மைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே இருந்த பகை தீரம். மனதில் இனம் புரியாத கவலை சிலருக்கு இருக்கும். பயணங்களால் பெரிய லாபங்கள் இருக்காது.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளால் லாபம் ஏற்படும். சகோதர வழி உறவுகள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் உங்களுக்கு சாதகங்கள் ஏற்படும்.
துலாம்:
துலாம் ராசியினர் இன்றைய தினம் தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். தாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் திறமைகள் வெளிப்படும். மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள். கலைத் தொழிலில் இருப்பவர்கள் சிறந்த எதிர்காலம் பெறுவார்கள். உணவு விடயங்களில் எச்சரிக்கை தேவை.
தனுசு:
தனுசு ராசிக்கு இன்றைய தினம் மன மகிழ்ச்சி ஏற்படும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பண விரயங்கள் ஏற்படும். பணியிடங்களில் பிரச்சனைகள் எழும். இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்காமல் போகும். பணியிடங்களில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த பணவரவு இருக்காது. உடல் நலத்தில் அக்கறை தேவை.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தொழில் வியாபாரங்களில் கடும் சவால்கள் இருக்கும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் லாபம் இருக்கும். உடல் நலம் மேம்படும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் தொலைதூரப் பயணம் ஏற்படும். ஒரு சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணம் வரவு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சம்பவம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் அன்னோன்யம் கூடும்.