சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகின்றார்.
இந்த வக்ர நிலையானது நவம்பர் வரை நீடித்திருக்கும். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் அசுப நிலையில் இருந்தால், அதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
அதுவே சுப நிலையில் இருந்தால், ஆண்டியும் அரசனாகக்கூடும். கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது சற்று பலவீனமாக இருக்கும்.
அந்த வகையில் சனி வக்ரமாக இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே தெரியும். குறிப்பாக சனி வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
முக்கியமாக 3 ராசிக்காரர்கள் சனி பகவானால் பணக்காரராகும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்,
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் காரிய வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் களில் திருப்தி உண்டாகும். மன விருப்பங்கள் நிறைவேறும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சிறப்பான லாபம் உண்டாகும். அரசாங்க ரீதியான உறவுகள் கிடைக்கும். வருமானம் பெருகும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் தள்ளிப்போன காரியங்கள் நிறைவேறும். மக்கள் செல்வாக்கு கூடும். பணியிடங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் வருமானம் உயரும். சிலருக்கு சுப விரய செலவுகள் ஏற்படும். உங்கள் பேச்சுத் திறமையால் காரியங்களை சாதிப்பீர்கள். பூர்விக சொத்து விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும். ஒரு சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சில தடங்கல்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. திருப்திகரமான பொருள் வரவு இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் வெளியூர் பயணங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வராத கடன் தொகை வந்து சேரும். வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத லாபங்கள் ஏற்படும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சுபச் செய்தி வந்து சேரும். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களில் இருந்த தடைகள் நீங்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் வருமானம் ஏற்படும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் இறையருள் உண்டு. உங்களை விட்டு விலகி சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நலம். புதிய முயற்சிகளை ஒத்தி போட வேண்டும். உடலாரோக்கிய விடயங்களில் அக்கறை தேவை. பணவரவில் இழுபறி நிலை இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். உத்தியோகங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும். தாராள பொருள் வரவு இருக்கும். எதிர்கால திட்டமிடல்களை செயல்படுத்துவீர்கள். கடன் பிரச்சனை தீரும்