மனிதர்களுக்கு பன்றியின் சிறுநீரகங்கள் பொருந்துமா..!

சமீப காலங்களாக விலங்குகளின் உறுப்புக்களை மனிதர்களுக்கு பொருத்தும் ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வகையில்,அமெரிக்காவின் நியூஜோர்க் நகரைச் சேர்ந்த, மூளைச்சாவடைந்த ஒரு நோயாளிக்கு, பன்றியின் சிறுநீரகம் கடந்த ஜூலை, 14ம் திகதி பொருத்தப்பட்டது.

ஒரு மாதத்தைக் கடந்தும், இந்த சிறுநீரகம் சிறப்பாக செயல்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்கால ஆய்வு செயன்முறைகள்

இது குறித்து நியூஜோர்க் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் கூறியுள்ளதாவது,

“மனிதர்களுக்கு விலங்குகளின் உடல் உறுப்புகளை மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை வாயிலாக பொருத்துவது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இது, விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்துவது குறித்த எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவும்” என்றனர்.