நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்கள் அதிஷ்டத்தை அடையப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் அமைப்பு பெறுவார்கள். சிறந்த மனிதர்களின் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரவு இருக்கும். சிலருக்கு சுப விரய செலவுகள் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் ஏற்ற இறக்கமான பலன்கள் இருக்கும். பால்ய கால நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்காலத்திற்கான காரியங்களை செய்வீர்கள். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் நண்பர்களால் பொருள் வரவு இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் விலகி செல்வார்கள். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் நல்ல லாபம் உண்டாகும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் காரியங்களில் தடைகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் இழுபறி ஏற்படும். சராசரியான வருமானம் இருக்கும். குடும்பத்தினர் வழியில் செலவுகள் ஏற்படலாம். வாகனப் பயணங்களின் பொழுது எச்சரிக்கை தேவை.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இன்று எதிலும் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சகோதர உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு தீரும். மதியத்திற்கு மேல் புதிய முயற்சியில் ஈடுபடலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று புதிய முயற்சிகளில் சிறப்பான வெற்றி ஏற்படும். மனோ தைரியம் அதிகரிக்கும். உத்தியோகங்களில் இருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம் இருக்கும். வீட்டில் பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் பொருளாதார நிலை உயரும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். தம்பதிகளிடையே ஒற்றுமை உண்டாகும். புதிய சொத்து வாங்கும் யோகம் அமையும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். ஒரு சிலருக்கு மருத்துவ ரீதியிலான செலவு ஏற்படும். பெரிய மனிதர்கள் நட்பால் அனுகூலங்கள் இருக்கும். குடும்பத்தினர் உங்கள் கருத்திற்கு மதிப்பளிப்பார்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை பெருகும். உறவினர்கள் வழியில் ஆதாயம் இருக்கும். நெருங்கிய நண்பர்களால் நன்மை ஏற்படும். பணியிடங்களில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத தடங்கல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். பிறருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி இருக்கும். வாகனங்கள் வழியில் செலவுகள் ஏற்படும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. புதிய காரிய முயற்சிகளில் தடை ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். உணவு விடயங்களில் கட்டுப்பாடு தேவை. வெளியூர் பயணங்களால் களைப்பு ஏற்படும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத லாபங்கள் ஏற்படும். நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். செல்வாக்கு உயரும். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகம் ஏற்படும்.