ஆவணி மாதத்தில் பேரதிர்ஷ்டம்… தேடிவரப்போகும் ராஜயோகம்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! தட்டித் தூக்கும் ராசிகள் யார் தெரியுமா?

சூரிய பகவானின் ஆதிக்கம் ஆவணி மாதத்தில் நிறைந்து இருப்பதால், அனைத்து விதமான சுப காரியங்களையும் இம்மாதத்தில் செய்வதற்கு சிறந்த மாதமாகும். எனவே, இந்த ஆவணி மாதத்தில் எந்த ராசிக்கெல்லாம் அதிஷ்டம் அதிகமாக கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் அனுகூலமான மாதமாகும். மேலும், இவர்கள் செய்யும் தொழிலிலும், வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உறவுகள் மேம்படும். அன்பு அதிகரிக்கும்.

குறிப்பாக இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வந்தால், இந்த மாதம் உங்களுக்கு வெற்றிகரமான மாதமாக அமையும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இம்மாதம் வெற்றிகரமான மாதமாக அமையும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் கல்வி போன்ற அனைத்திலும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படும். உங்கள் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். வேலை செய்யும் இடங்களில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இம்மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவதன் மூலம் உங்களுக்கு பல நல்ல காரியங்கள் நடக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களே இந்த ஆவணி மாதத்தில் உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். மேலும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும், வேலையில் இருப்பவர்களுக்கு பதிவு உயர்வும், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல தொழிலும் நல்ல முறையில் அமையும்.

நீங்கள் பொது இடங்களில் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீணாக வாக்குவாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு புதன்கிழமை அன்று குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட்டு வந்தால் பல வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் நன்மைகளும், நற்செய்திகளும் தரக்கூடிய மாதமாகும். உங்கள் தொழிலில் ஏற்பட்டிருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி லாபம் கிடைக்கும். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த ஆவணி மாதத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

நீங்கள் செய்யும் செயலை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் வெற்றி அடைவீர்கள். எனவே, இந்த நன்மைகள் அனைத்தும் பெற இந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட வேண்டும்.

விருச்சிகம்:
இந்த மாதம் விருச்சிக ராசிகாரர்களுக்கு நல்ல மாற்றத்தை தரக்கூடிய மாதமாகும். இவர்களது வீடு, தொழில், வேலை போன்ற விஷயங்களில் நல்ல மாற்றங்கள் அமையும். ஆனாலும் சில சமயங்களில் நீங்கள் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

மேலும் இம்மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை அன்று இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் வழிப்பட்டால் உங்களுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்.