30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் பயணிக்கும் சனி: 2025 வரை கோடான கோடி அதிர்ஷ்டம் – இன்றைய ராசிபலன்

நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். இவர் ராசியை மாற்றுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

கிரகங்களிலேயே சனி பகவான் மெதுவாக நகர்வதால், இவர் ராசியை மாற்றும் போது அதன் தாக்கமானது சற்று அதிகமாக இருக்கும்.

இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். இந்த சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நுழைந்தார்.

இந்த கும்ப ராசியில் சனி பகவான் 2025ஆம் ஆண்டு வரை பயணிப்பார். இதனால் கும்ப ராசியில் பயணிக்கும் சனியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக கும்ப ராசியில் சனி பகவான் இருப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு வரை தொழிலில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்கு இன்றைய தினம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உறவினர்களால் அனுகூலங்கள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் லாபம் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் யோகமான நாள். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் மன நிம்மதி ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் புதிய வீடு, மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். பெண்களுக்கு எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் புதிய சிந்தனைகள் உருவாகும். நண்பர்களால் பொருள் வரவு இருக்கும். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலையே இருக்கும். புதிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பண விடயங்களில் கவனம் தேவை.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களிடையே இருந்த பகை தீரும். சொத்து விவகாரங்களில் நல்ல தீர்வு கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டு.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் புதிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயங்கள் இருக்கும். சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண வயது பெண்களுக்கு நல்ல வரன் அமையும். தொழில், வியாபாரங்களில் இருந்த தடைகள் அகலும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் மக்கள் செல்வாக்கு பெருகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்க காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் உடல் நலனில் அக்கறை தேவை. வாகனங்கள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் காரியங்களில் தடங்கல்கள் ஏற்படலாம். உணவு விடயங்களில் அக்கறை தேவை. தொழில், வியாபாரங்களில் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். சராசரியான வருமானம் இருக்கும். வெளியூர் பயணங்களால் களைப்பு உண்டாகும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பணவரவில் இழுபறி ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற போராட வேண்டும். எதிர்பாராத வீண் செலவுகள் இருக்கும். சகோதரர்களால் நன்மை ஏற்படும்.