சிம்ம ராசியில் நுழையும் செவ்வாய் பகவான்… யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் இதோ

கிரகங்களின் தளபதியாக செயல்படும் செவ்வாய் கிராகம் கடந்த 18ம் தேதி சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நிலையில், இதன் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. அதில் சில ராசிகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
துலாம் ராசியில் செவ்வாய் 2 ஆம் மற்றும் 7 ஆம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால், 12 ஆம் வீட்டை ஆக்கிரமித்துள்ளார். இந்த நேரத்தில் தடைபட்ட வேலைகள் விரைவில் முடிவடைவதுடன், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் காணப்படும். காதல் வாழ்க்கையில் சற்று பதற்றம் ஏற்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொற்காலமாக இருக்கும். முதலீடு செய்வதில் கவனமுடன் செயல்படவில்லை என்றால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் முதலாம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியாக செவ்வாய் 11 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளதால், செலவுகள் அதிகரிக்கும். வேலையை முடிக்க வழக்கத்தை விட வேகமாக செயல்பட வேண்டும். தொழில் மற்றும் நிதிநிலையில் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் உங்கள் புரிதலும் பொறுமையும் மட்டுமே உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியில் 5 ஆம் மற்றும் 12 ஆம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் 10 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளதால், மாணவர்களிடம் தேவையற்ற கோபம், ஆவேசம் கொள்வீர்கள். வீட்டில் குழுப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும், அனைத்து விடயத்தையும் கட்டுக்குள் வைக்க முயற்சிப்பீர்கள். புதிய தொழில்களை தொடங்குவதை தவிர்க்கவும்.

மகரம்
மகரம் ராசியில் 4 ஆம் மற்றும் 11 ஆம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் 9 ஆம் வீட்டில் அமர்ந்துள்ள இந்த நேரத்தில், வியாபாரத்தில் பழைய திட்டத்தை மீண்டும் தொடங்க முயற்சிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பதற்றம் ஏற்படலாம். இந்த நேரத்தில் நீங்கள் எதைச் செய்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால் நீங்கள் முன்னேறுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசியில் செவ்வாய் 3 ஆம் மற்றும் 10 ஆம் வீட்டிற்கு அதிபதி மற்றும் 8 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளதால், பணியிடத்தில் சில சிக்கல் ஏற்படலாம். பயணங்களில் அதிக செலவு இல்லாமல் பார்த்துக் கொள்ளவதுடன், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் எடுக்கவும்.

மீனம்
மீன ராசியில் செவ்வாய் இரண்டாவது மற்றும் 9 ஆம் வீட்டிற்கு அதிபதி மற்றும் 7 ஆம் வீட்டை ஆக்கிரமித்துள்ளதால், வாழ்க்கைத் துணை மீது கோபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செவ்வாயின் பெயர்ச்சி காரணமாக பணியிடத்தில் தலைமைத்துவ வாய்ப்பை இழக்கக்கூடும்.