ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரக பெயர்ச்சி என்கிறோம்.
அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது.
இதற்கமைய இன்றைய தினம் அதிர்ஷ்டத்தை அடையபோகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்,
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். புதிய முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிரமப்படுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் விரும்பியவை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரங்கள் சிறக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் உடல் நலம் மேம்படும். உங்கள் பேச்சுத் திறமையால் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் தெய்வ பலம் அதிகரிக்கும். புதிய மனிதர்களை நம்பி காரியங்களை ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபார ரீதியிலான முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுக்க வேண்டும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அரசாங்க ரீதியிலான உதவிகள் பெறுவார்கள். பணியிடங்களில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். எதிலும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலையே இருக்கும். ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் கூடுதல் செலவுகள் ஏற்படும். ஒரு சிலர் கடன் வாங்கும் நிலையும் உண்டாகும்,எனினும் சமாளிப்பீர்கள். நண்பர்களால் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். பெண்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சிலர் புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தினருடன் வெளியில் செல்வீர்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் தேவையற்ற வம்பு, வழக்குகள் உண்டாகும். புதிய நட்பால் அனுகூலங்கள் இருக்கும். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டியை சமாளிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தாராள பொருள் வரவு இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்க பெறுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். தாய் மாமன் வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிக்கல் தீரும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் புதிய மனிதர்களால் தன லாபம் இருக்கும். சிலருக்கு சுப காரிய உண்டாகும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். சிலர் விருந்து, விசேடங்களில் கலந்து கொள்வீர்கள், உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.