குரு வக்ர பெயர்ச்சியால் கிடைக்கும் பணக்கார யோகம்… யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா? நீங்கள் எந்த ராசி..!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசியை மாற்றுவது இயல்பாக நடக்கும் செயலாகும். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் செல்வ செழிப்புக்கு அதிபதியான குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ள நிலையில், இதனால் விபரீத ராஜயோகம் ஏற்படவும் உள்ளது.

இந்த ஆண்டில் ஏப்ரல் 22ம் தேதி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியான குரு செப்டம்பர் மாதம் 4ம் தேதி மாலை 5 மணியளவில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.

டிசம்பர் மாதம் 31ம் தேதி காலையில் தான் குரு வக்ர நிவர்த்தி அடைகின்றார். இத்தருணத்தில் ராஜயோகத்தை பெறும் ராசியினரை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி
மேஷ ராசியினரைப் பொறுத்த வரையில் இந்த குரு வக்ர பெயர்ச்சி அதிர்ஷ்த்தையும், மிகவும் சாதகமான சூழ்நிலையும் கொடுக்கின்றது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்ப்பதுடன், தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். பணவரவு இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும்.

கடக ராசி
கடக ராசியினருக்கு இந்த பெயர்ச்சி காலம் சிறப்பாக அமைவதுடன், வியாழனின் இயக்கத்தில் ஏற்படும் இந்த மாற்றம் உங்கள் ஜாதகத்தின் பத்தாம் வீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழி வியாபாரத்தில் முன்னேற்றம் டிசம்பர் 31 வரை பணவரவு அதிகமாக இருக்கும்.

சிம்ம ராசி
சீறி வரும் சிம்ம ராசியினர் இந்த குரு வக்ர பெயர்ச்சியினால் நலல் செய்திகளை பிள்ளைகள் மூலம் பெறுவார்கள். டிசம்பர் மாதம் வரை வேலை, நிதிநிலை இவை அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட பணிகள் வேகமாக முடியும்.

மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மையினை பெறும் காலம் இதுவாகும். திடீர் நிதி ஆதாயத்தால் வங்கி இருப்பு அதிகரிப்பதுடன், ஆடம்பரமான பொருட்களையும் வாங்குவீர்கள். உங்கள் ஜாதகத்தில் குரு வருமான வீட்டில் இருக்கப்போவதால் பேரதிர்ஷ்டம் கிடைக்கும்.