பணக்காரராகும் வாய்ப்பை அள்ளி கொடுக்கப் போகும் சனி – யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..! எந்த ராசி..! இன்றைய ராசிபலன்

நவகிரகங்களில் புதன் மங்களகரமான கிரகமாகும். இந்த புதன் வியாபாரம், புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

மேலும் கிரகங்களிலேயே மிகவும் குறுகிய நாட்களில் தனது இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் இதுவரை சிம்ம ராசியில் பயணித்து வந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் திகதி, புதன் சிம்ம ராசியில் வக்ரமாகி பயணிக்கிறார். பொதுவாக கிரகங்கள் வக்ரமானால் நல்லதா, கெட்டதா என்று பலரும் கேட்கலாம். சுப கிரகங்கள் வக்ரமானால், அதனால் நற்பலன்கள் கிடைக்கும்.

அதுவே அசுப கிரகங்கள் வக்ரமானால், கெடு பலன்கள் கிடைக்கும். புதன் சுப கிரகம் என்பதால், இதன் வக்ர காலத்தில் பல ராசிக்காரர்கள் தொழிலில் நற்பலன்களையும், முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்,

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். தூரத்து உறவினர்களால் நன்மை ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உடல் நல பாதிப்பு ஏற்படலாம். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணவரவில் இழுபறி நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் நெருக்கடி இருக்கும். வெளியூர் பயணங்களால் லாபம் ஏற்படாது.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதர வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். புதிய முயற்சிகளில் சிறிது இழுபறிக்கு பிறகு வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் மனமகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். பெண்களால் தன வரவு ஏற்படும். சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கூட்டாளிகளால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் சிந்தனை தெளிவு உண்டாகும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் அமையும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் காரிய சித்தி உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். உடல்நல கோளாறுகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைக்கு சமூக தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்படும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். அந்நிய நபர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சிலருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு நீங்கும். இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மணக்குழப்பங்கள் அகலும். தொழில், வியாபாரங்களில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். குடும்பத்தினருக்காக செலவு செய்வீர்கள். நண்பர்களால் பொருள் வரவு ஏற்படும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு தேவையற்ற செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சியில் மேற்கொள்ள வேண்டும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தாராள பொருள் வரவு இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். மகான்களின் ஆசிகளை பெறுவீர்கள்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் மன நிம்மதி உண்டாகும். பொருளாதார கஷ்டங்கள் தீரும். தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும். எதிர்பாராத நல்ல செய்தி கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். உடல் நலனில் அக்கறை தேவை.