ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றம் அவ்வப்போது நிகழும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும்.
அந்த வகையில் நவகிரகங்களில் சந்திரன் குளிர்ச்சியானவர். கிரகங்களிலேயே சந்திரன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக் கூடியவர். அதுவும் இவர் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
இந்த சந்திரன் ஆகஸ்ட் 24 ஆம் திகதி விருச்சிக ராசியில் நுழைந்தார். சந்திரன் விருச்சிக ராசியில் நுழையும் போது, இந்திர யோகம் என்ற சுப யோகம் உருவானது.
இந்த யோகத்தால் ஒரு செல்வந்தராவதோடு, மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த இந்திர யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நற்பலனைப் பெறுவார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்,
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். சிலர் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள். காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பப் பிரச்சனைகள் நல்லபடியாக தீரும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்காது. நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி இருக்கும். உடல்நலக் குறைவு ஏற்பட்டு நீங்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் தெய்வ அனுகிரகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் பொருள் வரவு ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய தொழில், வியாபார முயற்சிகளில் அனுகூலங்கள் ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். மனோ தைரியம் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிருப்தி உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் மறைமுக எதிரிகள் விலகுவார்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். மக்கள் செல்வாக்கு உயரும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்று இதிலும் தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வெற்றி பெற கடமையாக போராட வேண்டியிருக்கும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு செல்வீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் நண்பர்களால் ஆதாயங்கள் இருக்கும். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மனமகிழ்ச்சி இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் அமையும். பெண்களுக்கு பொருள் வரவு ஏற்படும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சகோதர வழி உறவுகள் உதவி கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படலாம்.
கும்பம்:
கும்ப ராசியினர் இன்றைய தினம் எதிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். பிறருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் உங்கள் திறமைகளால் பொருளும், புகழும் சேரும். சில பெரிய வீடு வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் பெறுவார்கள். தொழில், வியாபாரங்களில் வளர்ச்சி இருக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவம் ஏற்படும்.