சந்திர பெயர்ச்சியால் உருவான இந்திர யோகம்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா?- இன்றைய ராசிப்பலன்!

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

இதேவேளை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும். நீங்கள் எதிர்பாராத ஒரு நல்ல விஷயம் தொலைபேசியின் மூலம் உங்கள் செவிகளை வந்து சேரும். மன தைரியம் அதிகரிக்கும். எதிரிகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். இன்றைய நாள் வெற்றி உங்கள் வசமாகும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையப் போகின்றது. நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தோடு பொழுதை கழித்து சந்தோஷம் அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். ஆக மொத்தத்தில் இன்று சந்தோஷத்திற்கு எந்த குறையும் வராது.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. முன்கோபம் கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் இது நடந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கக் கூடாது. விட்டுக் கொடுத்துச் சென்றால் இன்னும் பல நன்மைகளை அடையலாம்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக அமையப் போகின்றது. எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். பலபேர் உங்களை பாராட்டும் அளவிற்கு உங்களுடைய திறமை வெளிப்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்த உடல் உபாதை பிரச்சனை தீரும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. சொந்தத் தொழிலில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம். அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு புதியதாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதீங்க.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன மன சஞ்சலம் ஏற்படும். மன குழப்பம் ஏற்படும். பிரச்சனைகள் பெரியதாக இருக்காது. முக்கியமான வேலைகளை இன்று தொடங்காதீர்கள். உங்களுடைய அன்றாட வேலையை மட்டும் கொஞ்சம் கவனத்தோடு செய்தால் போதும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். ஹெல்மெட் அணிய வேண்டும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் முழுவதும் பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். எல்லா விஷயத்தையும் போட்டு மனதில் குழப்பிக் கொள்ள வேண்டாம். முன் கோபத்தை குறைக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. முன்கோபத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையாது. பொறுமை மட்டும்தான் இன்று உங்களுக்கு கை கொடுக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. தடைப்பட்டு வந்த சுப காரியம் நடக்கும். பிரிந்து இருந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டிற்கு தேவையான ஆடை ஆபரண பொருட்களை வாங்கக்கூடிய நல்ல நேரம் கை கூடி வரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருப்பது போல தோன்றும். சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனாலும் உங்களுடைய சமயோஜித புத்தியால் அதையெல்லாம் சுலபமாக சமாளிக்க போகிறீர்கள். உங்கள் திறமையை கண்டு நீங்களே வியக்கும் அளவுக்கு சில சம்பவங்கள் நடக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நிறைய சுவாரசியமான நல்ல சம்பவம் நடக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையின் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். வாய்ப்புகளை தவற விட்டவர்கள் நிச்சயம் வருத்தப்படுவீர்கள். ஆகவே முயற்சி செய்யாமல் எதையும் கைவிடாதீர்கள். வரக்கூடிய நல்ல வாய்ப்புகளை நல்வழிப்படுத்தும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சில சிரமங்கள் ஏற்படும். நீங்கள் எந்த வேலை செய்தாலும் குறை சொல்வதற்கு உங்கள் பின்னால் இரண்டு பேர் நிற்பார்கள். அவர்களை சமாளிப்பதில் சின்ன சிக்கல் இருக்கும். இருந்தாலும் பயப்பட வேண்டாம். உங்கள் மனதில் பட்டதை பேசுங்கள். உங்களுக்கு சரி என்று தோன்றுவதை செய்யுங்கள். நேர்மையாக நடந்து கொண்டால் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. மனதை அனாவசியமாக அலைபாய விடக்கூடாது. மூன்றாவது நபரின் பேச்சைக் கேட்டு எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். வாழ்க்கை துணை சொல்லுவதை கேளுங்கள். உங்கள் சொந்த பந்தங்கள் சொல்லுவதை கேளுங்கள். நேற்று வந்த நட்பு, இன்று வந்த நட்பு என்று முன் பின் தெரியாதவர்களை நம்பி எந்த ஒரு வேலையும் தொடங்க வேண்டாம். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது ஜாக்கிரதை.