ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஒவ்வொரு மாதமும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமான செப்டெம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த செப்டெம்பர் மாதத்தின் தொடக்கத்தில், அதாவது செப்டெம்பர் 04ஆம் திகதி மேஷ ராசியில் பயணித்து வரும் குரு பகவான் வக்ரமாகிறார்.
அதே சமயம் செப்டெம்பர் 04ஆம் திகதி சுக்கிரன் கடக ராசியில் உதயமாகவுள்ளார். அதன் பின் செப்டெம்பர் 16ஆம் திகதி புதன் சிம்ம ராசிக்கு செல்கிறார்.
பின் செப்டெம்பர் 17ஆம் திகதி சூரியன் கன்னி ராசிக்கு செல்கிறார். இறுதியாக செவ்வாய் கன்னி ராசிக்கு செல்கிறார். இப்படி பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பதோடு, இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் போகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன தைரியம் அதிகரிக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று சவால்களை எதிர்கொண்டு சந்திப்பீர்கள். கவலையே வேண்டாம் இன்றைய தினம் உங்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். எதிரிகளை அடித்து துவம்சம் செய்யப் போகிறீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பல மடங்கு சுறுசுறுப்பு இருக்கும். எறும்பு போல எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக முடித்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உற்சாகத்திற்கு ஒரு துளி கூட இன்று குறைவிருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாளாக தான் அமையப் போகின்றது. ஆனால் வாழ்க்கை துணையிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது. கணவன் மனைவி விட்டுக் கொடுத்து சென்றால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நினைத்த நல்ல மாற்றங்கள் நடக்கும்.
கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இன்று மனசு கொஞ்சம் குழப்ப நிலையில் இருக்கும். எதையோ இழந்தது போல கவலையாக தான் இருப்பீர்கள். எதையும் நினைத்து கவலைப்பட வேண்டாம். குலதெய்வத்தை நினைத்து விட்டு அன்றாட வேலையை தொடங்கினால், எல்லாம் நல்லபடியாக நடக்கும். முக்கியமான வேலையை நாளை தள்ளி வைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாள். நீங்கள் நினைத்தது எல்லாம் நல்லபடியாக நடக்கும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு பிள்ளையார் சுழி போடக்கூடிய நேரம் வந்துவிட்டது. புதுசாக பொன் பொருள் வண்டி வாகனம் வாங்குவதாக இருந்தால் இன்றைக்கு வாங்கலாம். வீட்டிற்கு தெரிவித்த தேவையான சின்ன சின்ன பொருட்களை வாங்கவும் இது சிறந்த நாள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். சம்பள உயர்வு ஏற்படும். சொந்த தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பாட்னரை நம்பி கணக்கு வழக்கை கண்மூடித்தனமாக ஒப்படைக்க வேண்டாம். எதிலும் கவனம் இருந்தால் அது நமக்கு நன்மையை கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலும் பிரச்சனையில் இழுத்து விட நாலு பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். உஷாராக இருந்து கொள்ளுங்கள். ரொம்பவும் நெருங்கிய நண்பர்களே உங்களுக்கு எதிரியாக கூட மாறலாம். ஜாக்கிரதை.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கஷ்டம் வரக்கூடிய நாளாக தான் இருக்கப் போகின்றது. பயந்துடாதீங்க, புதுசாக எதையும் தொடங்க வேண்டாம். எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம். ஆழ்ந்த சிந்தனையில் இறங்க வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள ஓம் நமசிவாய மந்திரம் சொல்லுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அமோகமான வெற்றிகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்க போகின்றது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து, நடக்காத நல்ல விஷயங்கள் என்று நடக்கும். மன தைரியம் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாளாகத்தான் இருக்கப் போகின்றது. ஆனால் நீங்கள் கொஞ்சம் பிடிவாத குணத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் முன் கோபப்படக்கூடாது. அடுத்தவர்களை எடுத்துறிந்து பேசக்கூடாது. உறவுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் முரண்டு பிடித்தால் பிரச்சனை உங்களுக்கு தான்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. நாவடக்கம் இல்லாவிட்டால் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். மூன்றாவது நபரின் விஷயத்தில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயத்தில் கூட போராடி வெற்றியை காணக்கூடிய நிலை உண்டாகும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எந்த முடிவை எடுப்பது, எந்த முடிவை எடுக்கக் கூடாது என்பதில் சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான முடிவை எடுப்பதாக இருந்தால், நாளை தள்ளி போடுங்கள். யாரிடமும் முன்கோபத்தை காட்டாதீங்க. குழப்பமான மன நிலையில் இருக்கும் போது எதைப்பற்றியும் சிந்திக்காதீர்கள். மனம் தெளிவாகும் போது சில பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வு கிடைக்கும் என்பதை முழுசாக நம்பினால் நிம்மதி பிறக்கும்.