ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஒவ்வொரு மாதமும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமான செப்டெம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த செப்டெம்பர் மாதத்தின் தொடக்கத்தில், அதாவது செப்டெம்பர் 04ஆம் திகதி மேஷ ராசியில் பயணித்து வரும் குரு பகவான் வக்ரமாகிறார்.
அதே சமயம் செப்டெம்பர் 04ஆம் திகதி சுக்கிரன் கடக ராசியில் உதயமாகவுள்ளார். அதன் பின் செப்டெம்பர் 16ஆம் திகதி புதன் சிம்ம ராசிக்கு செல்கிறார்.
பின் செப்டெம்பர் 17ஆம் திகதி சூரியன் கன்னி ராசிக்கு செல்கிறார். இறுதியாக செவ்வாய் கன்னி ராசிக்கு செல்கிறார். இப்படி பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பதோடு, இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் போகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளி போடுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வண்டி ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லவும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று இந்த நாளை சந்தோஷமாக கழிக்க போகிறீர்கள். பிரச்சனை என்று வந்தால் தோல் கொடுக்க உறவுகள் இருக்கிறது. நல்ல நட்பு நல்ல உறவுகள் உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் சேர்ந்து தலை நிமிர்ந்து நிற்க வைக்கக்கூடிய நாளாக அமையப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வருமானம் அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, எல்லோரிடமும் பேச்சில் நிதானத்தை காண்பித்தால், நீங்கள் நினைத்துப் பார்க்காத நிறைய நன்மைகள் தேடி வரும். அதிர்ஷ்டம் நம் பக்கம் இருந்தாலும், அவ்வபோது வரக்கூடிய சில சங்கடங்களை நினைத்து கவலைப்படக்கூடாது. எப்போதும் மன உறுதியை நிலை நிறுத்தினால் வாழ்வில் முன்னேறலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன் கோபம் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது உங்களுடைய முன்னேற்றத்தை தடைப்படுத்தும். உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகளை கெடுத்துவிடும். ஆக முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை தரும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. வீட்டில் சுப காரிய பேச்சுக்கள் தொடங்கும். விருந்தினர்களின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். ஒரு சில நாட்களில் வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்கும். கெட்டிமேளம் சத்தம் கேட்ட வீட்டில் குவா குவா சத்தமும் கேட்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக அமையப் போகின்றது. சொந்த தொழில் தொடங்க அல்லது வேறு ஏதாவது புதிய முயற்சிகளை மேற்கொள்ள இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் இன்று எதை தொட்டாலும் அது உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். பண வரவு அதிகரிக்கும். கடன் தொல்லை படிப்படியாக குறையும்.
விருச்சிகம்:
விருச்சக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்க போகின்றது. எல்லா வேலையையும் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்றும், கொஞ்சம் தூங்கினால் போதும் என்று இருப்பீர்கள். ஆனால் அது தவறு. இன்றைக்கான வேலையை இன்றே முடிப்பது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். சோம்பேறித்தனம் நீங்க கொஞ்சம் கோமியம் கலந்த தண்ணீரில் முகம் கழுவிக்கோங்க.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நீங்கள் நடக்கவே நடக்காது என்று ஒதுக்கி வைத்த காரியங்கள் எல்லாம் கூட, உங்களுக்கு சாதகமாக நடக்கும் என்றால் பாருங்களேன். கிடப்பில் போட்ட அரசாங்க வேலைகளை இன்று எடுக்கலாம். உடனே கையெழுத்தாகும். சிக்கலாக இருக்கும் பிரச்சனையை கூட உங்கள் சாதுரியமான திறமையினால் சரி செய்து விடுவீர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக அமையப் போகின்றது. வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதற்கான வேலைகளையாவது என்று தொடங்குவீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாத வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசௌகரியமான நாளாக தான் இருக்கும். எந்த வேலையை செய்வது எந்த வேலையை விடுவது என்று சில குழப்பம் இருக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய உடல் நிலையில் சின்ன சின்ன சங்கடங்கள் உண்டாகும். குழந்தைகளை கவனிக்க முடியாத சூழ்நிலை என்று, சின்ன சின்ன பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையும் நிதானமும் தேவை. யார் என்ன சொன்னாலும் எனக்கு என்ன என்று உங்கள் வேலையை பார்த்தால் பிரச்சனை இல்லை. வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு சென்றால் மூக்கு உடைய போவது உங்களுக்குத்தான். கணவன் மனைவி அனுசரணையாக இருக்க வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்துக்கோங்க.