குருவால் இன்னல்களை சந்திக்கும் 4 ராசிகள்! வக்ரமடைந்திருக்கும் குரு… எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

குரு பகவான் கஷ்டப்பட போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் மூலம் குன்றாமல் இருக்கும் என கூறப்படுகிறது. குருபகவான் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், மகிழ்ச்சி, ஆடம்பரம், செல்வம் உள்ளிட்டவற்றிற்கு காரணியாக விளங்குகிறார்.

அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தனது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். மேஷ ராசியில் இருக்கும் குரு பகவான் வரும் செப்டம்பர் நான்காம் தேதி அன்று மேஷ ராசியிலேயே வக்ர நிலை அடைகிறார். இதன் மூலம் கஷ்டங்களை அனுபவிக்க போகும் சில ராசிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி குருபகவான் வக்கிர நிலையில் வர உள்ள காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் உண்டாக்கப் போகின்றது. முடிவெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. புதிய முடிவுகள் எடுப்பதில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ரிஷப ராசி குருபகவானால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு உடல்நல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோரின் உடல்நலத்தில் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய முடிவு எடுக்கும் போது மற்றவர்களிடம் ஆலோசனை செய்வது மிகவும் நல்லது. பெரிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் இப்போது தேவையில்லை. துன்பங்கள் அருகில் வந்தால் நீங்கள் நகர்ந்து செல்வது நல்லது.

கடக ராசி குருபகவானால் உங்களுக்கு சாதகம் மட்டும் சூழ்நிலை உண்டாகப் போகின்றது. புதிது புதிதாக வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலையை திட்டமிட்டு செய்தால் முன்னேற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை சற்று கவனமாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி குரு பகவானின் வக்கிர நிலை உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உண்டாக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. கருத்து வேறுபாடுகளை கண்டு கொள்ளாமல் செல்வது நல்லது. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கும்.