ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றம் அவ்வப்போது நிகழும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும்.
அந்த வகையில் நவகிரகங்களில் சந்திரன் குளிர்ச்சியானவர். கிரகங்களிலேயே சந்திரன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக் கூடியவர். அதுவும் இவர் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
சந்திரன் விருச்சிக ராசியில் நுழையும் போது, இந்திர யோகம் என்ற சுப யோகம் உருவானது.
இந்த யோகத்தால் ஒரு செல்வந்தராவதோடு, மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த இந்திர யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நற்பலனைப் பெறுவார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்,
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகமான நாளாக இருக்கப் போகின்றது. மனது குழப்பமாக இருக்கும். ராத்திரி படுத்தால் தூக்கம் வராது. குழப்பத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். கோபத்தை அடுத்தவர்கள் மேல் காட்ட வேண்டாம். மனதை அமைதிப்படுத்த ஓம் நமசிவாய மந்திரம் சொல்லலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமையப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவு பெரிய கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதை சுலபமாக முடித்து விடுவீர்கள். பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களால் சில சிக்கல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. துஷ்டனை கண்டால் தூர விலகு, என்று இருந்து கொண்டால் பிரச்சனை இல்லை.
கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இன்று தெளிவான நாளாக இருக்கும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பிடிவாத குணத்தை விடுவதும் கோபமாக பேசுவதையும் குறைத்துக் கொண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் நிலையாக இருக்கும். யாரிடமும் எதற்கும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வீட்டில் சந்தோஷ பெருகும். நீண்ட நாள் முயற்சி செய்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருப்திகரமான நாளாக அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் தவித்து வந்திருந்த நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். உதாரணத்திற்கு அன்னதானம் செய்வது, அடுத்தவர்களுக்கு உதவி செய்வது போன்ற விஷயங்களில் இன்று அதிக கவனம் செலுத்துவீர்கள். இப்படிப்பட்ட விஷயங்களை செய்வதன் மூலம் உங்களுக்கு இருந்த மனக்கவலைகள் நீங்குவதை உணரக்கூடிய சூழ்நிலை அமையும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக தான் அமையும் எந்த ஒரு வேலையையும் சுலபமாக முடிக்க முடியாது. இழுபறியாக சென்று தலைவலியை கொடுக்கும். நேரத்தை நல்லபடியாக கழிக்க இறைவழிபாடு செய்வது நன்மையை தரும். நேரம் கிடைக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி தரும் பாடல்கள் கவிதைகளை படிக்கலாம். புதிய முடிவுகளை நாளை தள்ளிப் போடுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நிறைந்த நாளாக தான் அமையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாள் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு நல்ல வேலை காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் தடைபட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தினமும் செய்யக்கூடிய வேலையில் கூட அதிக கவனம் தேவை. எதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமான முடிவுகளை அடுத்த நாள் தள்ளி போடுங்கள். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக அமையும். எல்லா வேலையும் முன்கூட்டியே முடித்துவிட்டு கிடைக்கக்கூடிய நேரத்தை சந்தோஷமாக ஜாலியாக செலவழிப்பீர்கள். உதாரணத்திற்கு குடும்பத்தோடு கோவில் செல்வது, வெளியிடங்களுக்கு போய் சாப்பிடுவது போன்ற சந்தோஷமான நிறைய நிகழ்ச்சிகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இன்றைய நாளை என்ஜாய் பண்ணி அனுபவிச்சுக்கோங்க.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைவான நாளாக தான் இருக்கும். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மை நடக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் கடன் சுமை குறையும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொடக்கமே அமோகமான வெற்றி பெறக்கூடிய நாளாக தான் அமையப் போகின்றது. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். சின்ன சின்ன தோல்வி வந்தால் உடனே சோர்ந்து போகாதீங்க. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்று இந்த மாதத்தை தொடங்குங்கள் நிச்சயம் சக்சஸ்தான்.