நாள் முழுவதும் வேலை செய்து களைத்துப்போன ஒருவருக்கு உடல் அசதியை போக்க தூக்கம் அவசியமானது.
ஆனால் இந்த தூக்கம் நாளொன்றுக்கு எவ்வளவு நேரம் இருக்கவேண்டும் என்பதே முக்கியமானது.அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பார்கள்.
இதன்படி தூக்கம் எப்படி அமைய வேண்டும் இல்லாவிட்டால் அதன் பாதிப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.
ஆறு முதல் எட்டு மணி நேரம்
ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்
தூக்கம் மனித செரிமான அமைப்பையும் பாதிக்கிறது.
குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது தூங்காதவர்களுக்கு வயிற்று நோய்கள் வரலாம்.
கண்களையும் பாதிக்கும்
சரியான ஓய்வு இல்லாதது கண்களையும் பாதிக்கும்.
மாணவர்கள் இரவில் தாமதமாகப் படிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும் மாறாக, இரவில் விரைவாக தூங்கச் செல்வதும், அதிகாலையில் எழுந்து படிப்பதும் அதிக பலன் தரும்