நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அடையப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திட்டமிட்டபடி எல்லா வேலையும் சரியாக நடக்கும். உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து அக்கறையோடு நடந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஏமாற்றம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. யாரையும் முழுசாக நம்பாதீங்க. குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீங்க. எதிர் பாலின நட்பு கூடாது. உங்கள் பணமோ விலை உயர்ந்த பொருட்களையோ, அடுத்தவர்களிடம் நம்பி கொடுக்கக் கூடாது. கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று செல்வாக்கு நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கான பெயரும் புகழும் கிடைக்கும். மரியாதை உயரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழில் இத்தனை நாள் சாதிக்க முடியாத ஒரு விஷயத்தை இன்று சாதித்து காட்டப் போகிறீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வருமானம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் கடன் தொகை வசூல் ஆகும். வருமானமே இல்லாமல் சும்மாவே சுற்றி திரிந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சந்தோஷத்தில் திக்கு முக்காட போகிறீர்கள். பணதங அதிகம் செலவு செய்ய வேண்டாம். சேமிப்பு எதிர்காலத்திற்கு நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன விஷயத்தில் கூட மறதி ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் முக்கியமான வேலையை மறந்து, திட்டு வாங்குவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க. பணம் நகை இவைகளை கவனமாக கையாளுங்கள். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனம் தேவை.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரி நல்ல பெயரை சம்பாதித்து முன்னேற்றம் அடைவீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனசு பலவீனமாக இருக்கும். எந்த ஒரு சின்ன விஷயம் நடந்தாலும், உடனே கவலைப்பட தொடங்கி விடுவீர்கள். நல்ல விஷயமாக இருந்தாலும் அதற்கு ஒரு கவலை. கெட்ட விஷயமாக இருந்தாலும் அதற்கு ஒரு கவலை. கவலையை விடுத்து சந்தோஷமாக வாழ குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் வெற்றி பெறக்கூடிய நாளாக அமையப்போகின்றது. நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி தொலைபேசியின் மூலம் வந்து சேரும். நீண்ட நாட்களாக தொழிலில் முயற்சி செய்து வந்த காண்ட்ராக்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு சென்று இறைவழிபாடு செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் மனதில் நினைத்த ஆசை இன்று நிறைவேறும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இடம் மாற்றம் நன்மையை கொடுக்கும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். எல்லா வேலையையும் ஒதுக்கி வைத்துவிட்டு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள். நல்ல தூங்குவிங்க. நல்லா சாப்பிடுவீங்க. சந்தோஷத்துக்கு எந்த குறையும் இருக்காது. கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் தொடங்கும். சுப செலவுகளும் அதிகரிக்கும். சொந்த தொழிலில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. எதற்காகவும் அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். நீங்க பிளான் பண்ண படி வேலை நடக்காது. அதனால் டென்ஷனும் கூடுதலாக இருக்கும். கவலைப்படாதீங்க. நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, தெம்பாக வேலை செய்யுங்கள். கடவுள் உங்கள் பக்கம்.