அதிர்ஷ்டத்தை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா?- இன்றைய ராசிப்பலன்!

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அடையப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் இருந்தபடி குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். வீட்டை சுத்தம் செய்து, அலங்காரம் செய்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். சின்ன சின்ன சந்தோஷம் பெரிய அளவில் மனநிறை கொடுக்கும். மனதிற்கு பிடித்த ஆடை ஆபரண அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கப் போகின்றது. ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை முடித்து விடுவீர்கள். அடுத்த வாரத்திற்கு என்னென்ன வேலையை செய்யலாம் என்பதற்கும் ஒரு சின்ன பிளான் போட்டு வச்சுப்பீங்க. இந்த ஞாயிற்றுக்கிழமை சோம்பேறித்தனம் இல்லாத ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். எந்த ஒரு வேலையையும் எளிமையாக முடிக்க முடியாது. இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை இரட்டிப்பாகும். சொந்த தொழிலில் சின்ன சின்ன எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் அசதி ஏற்படும்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் சுகமான நாளாக இருக்க போகின்றது. சந்தோஷமாக மனநிறைவாக ரெஸ்ட் எடுக்க போறீங்க. ஆரோக்கியமான, ரொம்ப பிடித்த நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று ஞாயிற்றுக்கிழமை அப்படியே ஓடிவிடும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பீர்கள். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிறைந்த நாளாக தான் இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். வாரா கடன் வசூல் ஆகும். சொந்த தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை செய்ய வேண்டாம். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். சொத்து வாங்குவது விற்பது போன்ற எந்த ஒரு வேலையையும் இன்னைக்கு செய்யாதீர்கள். அன்றாட வேலையை கவனத்தோடு செய்தாலே போதும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக அமையப் போகின்றது. நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தாய்மாமன் உறவால் நன்மை ஏற்படும். விவசாயிகளுக்கு இந்த நாள் அமோகமான லாபத்தை கொடுக்கும். சூதாட்டம் நஷ்டத்தை உண்டாக்கும். நேர்வழியில் செல்வதே நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. விருப்பமே இல்லாத செய்யக்கூடிய வேலை கூட உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக அமைந்து விடும். எதிர்பாராத பண வரவு இருக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. சின்ன சின்ன விஷயத்தில் கூட அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அதிக கவனத்தோடு எல்லா வேலையும் செய்து முடிக்க போகிறீர்கள். நமக்கு ஆர்வம் அதிகமாக இருந்தால் அந்த வேலையை செய்வதில் சிரமம் இருக்காது அல்லவா. இன்று உங்களுக்கு எல்லாம் ஜெயமே.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வரவு அதிகரிக்க கூடிய நாளாக இருக்கப் போகின்றது. ஏதாவது ஒரு வகையில் வருமானம் உங்கள் கையை வந்து சேரும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் தொலைபேசியின் மூலமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை அன்று வேலை செய்ய சொன்னால் கூட கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய பேரின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு உதவி கரம் நீட்ட நிறைய பேர் வருவாங்க. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருங்கள். உங்கள் குழந்தைகளின் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தற்போது இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் என்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் பேசக் கூடிய பேச்சுக்கும் எடுக்கக்கூடிய முயற்சிக்கும் எதிர்ப்பு சொல்வதற்கு உங்களை சுற்றி நான்கு பேர் இருப்பார்கள். இன்று நீங்கள் எதை செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு கொஞ்சம் போராட்டமும் கூட தேவைப்படும். சிரமங்கள் நிறைந்த இந்த நாளை அமைதிப்படுத்த பொறுமை தான் தேவை.