தேடிவரப்போகும் ராஜயோகம்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அடையப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு உண்டான பேச்சுவார்த்தை நடக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டு பெண்களுக்கு வரவு நிறைந்த நாள் இது. பணம் நகை புடவை என்று பல நல்ல விஷயங்களின் வரவினால் பெண்களின் மனது நிறைவு பெறும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க கூடிய நாளாக அமையும். எதிர்காலத்தில் எப்படி வாழ போகின்றோம், எப்படி வாழ்க்கையை திட்டமிடுவது என்று சில குழப்பத்தோடு இருப்பீர்கள். கவலைப்படாதீங்க. இது எல்லோருக்கும் வரக்கூடிய இயல்பான குழப்பம் தான். உங்களுடைய எதிர்காலமும் நன்றாக இருக்கும். மனக்குழப்பம் தீர குலதெய்வ கோவிலுக்கு செல்லலாம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாட்களாக வசூல் ஆகாத கடன் தொகை வசூல் ஆகும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அலுவலகத்தில் வேலை பளு வாரத் தொடக்கத்திலேயே அதிகரிக்கும். உடல் அசதி ஏற்படும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் இருக்காது. மந்தமான சூழ்நிலையை நிலவும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரத் தொடக்க நாள் ரொம்ப ரொம்ப சுறுப்பாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் கண்கள் உங்கள் பக்கம் திரும்பும். முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பேச்சு சாதுரியத்தால் கஷ்டமான நிறைய விஷயங்களை சுலபமாக முடித்து விடுவீர்கள்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அமைதி நிலவ கூடிய நாளாக அமையப்போகின்றது. யார் என்ன தொல்லை கொடுத்தாலும் அமைதியாக உங்கள் வேலையை நீங்கள் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இது கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். வாரத் தொடக்கத்திலேயே காலையில் எந்திரிக்க கஷ்டம். வேலை செய்ய கஷ்டம். இன்னும் ஒரு வாரத்தை எப்படி தான் கழிக்க போகின்றோம் என்று யோசிப்பீர்கள். ஆனால் கவலைப்படாதீங்க. அடுத்தடுத்த நாட்கள் உங்களுக்கு நன்மையை தரும். சோம்பேறித்தனம் இருந்தாலும் அன்றாட வேலையை செய்துதானே ஆக வேண்டும். உற்சாகத்தை வர வைக்க ஸ்ரீ ராம ஜெயம் சொல்லுங்கள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்குது. இருந்தாலும் உங்களுக்கு உதவியாக நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள். குடும்ப ஒற்றுமை பலம் பெறும். குறிப்பாக தாய்மாமன் உறவால் நன்மை நடக்க வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்கள் இன்றைய தினம் பணம் சம்பத்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. சொத்து சம்பந்தப்பட்ட பதிவுகளை நாளைய தினம் தள்ளி வைத்துக் கொள்வது நல்லது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெளியூர் பயணம் செய்யாமல் இருப்பது நல்லது. கட்டாயம் பயணம் செய்தே ஆக வேண்டும் என்றால் பயணத்தின் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஹெல்மெட் போடுவது சீட், சீட் பெல்ட் போடுவது போன்ற விஷயங்களை கரெக்ட்டா செய்யுங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிலும் அலட்சியம் வேண்டாம். கூடுதல் கவனம் இருந்தால் பிரச்சனைகள் குறையும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத நல்லது நடக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லக் அடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று யோகம் நிறைந்த நாளாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி பெறுவீர்கள். மாமனார் வழி சொந்தங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். நீண்ட நாள் கஷ்டப்பட்டு செய்த வேலைக்கு நல்லதொரு பலனை கடவுள் கொடுக்கப் போகின்றான்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொருளாதாரத்தில் நெருக்கடி இருக்கும். எந்த செலவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சிலருக்கு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாகத்தான் எல்லா விஷயங்களும் நடக்கப் போகிறது. மேல் அதிகாரிகளே உங்களுடைய ஆதரவை எதிர்பார்ப்பார்கள் என்றால் பாருங்கள். பணத்தை தவிர உங்களுக்கு என்று வேறு எந்த பிரச்சனையும் இருக்காது.