வக்ரமாகும் குரு! பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! – இன்றைய ராசிபலன்

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அடையப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கப்போகின்றது. அவசரப்பட்டு எந்த விஷயத்திலும் கோபப்படக்கூடாது. அவசரப்பட்டு எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கக் கூடாது. நிதானமாக யோசித்து முக்கியமான வேலைகளை செய்யுங்கள். பொறுமை ரொம்ப ரொம்ப முக்கியம். பதறாத காரியம் சிதறாது. இன்று இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக முடித்து விடுவீர்கள். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இருக்கும் வேலை எது விட, உயர்ந்த பதவியில் வேலையும் கிடைக்கும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். செய்யக்கூடிய வேலையை கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செய்யுங்கள். மன நிம்மதி இருக்காது. அசௌகரியமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். எதையோ இழந்தது போல சோகமாகவே இருப்பீர்கள். கவலை வேண்டாம் எல்லாம் சரியாகிவிடும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நன்மை தரக்கூடிய நாளாக அமையப் போகின்றது. வாழ்க்கையில் அடுத்த படிக்கு காலடி எடுத்து வைக்கப் போகிறீர்கள். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாள் இது. நீங்களே எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எல்லா வேலையையும் பக்காவா முடிச்சிடுவீங்க. சொன்ன நேரத்துக்கு முன்னாடியே. பெயர் புகழ் அந்தஸ்து பதவி இவைகளுக்கு உண்டான மதிப்பை புரிந்து கொள்வீர்கள். திறமையான பேச்சும், திறமையான செயல்பாடும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்களைப் பார்த்து உங்களுக்கே பொறாமை வரும் என்றால் பாருங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப சந்தோஷமான நாளாக அமையும். நீங்கள் எதிர்பார்க்காத பண வரவு இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்த தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் காண்பீர்கள். அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு உங்களுடைய முன்னேற்றம் இருக்கும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சொன்ன வாக்கை நிறைவேற்றி தரக்கூடிய நாளாக அமையப் போகின்றது. சொன்ன வார்த்தை காப்பாற்ற உயிரை கொடுத்து போராடுவீங்க. ஆனால் வருமானத்தில் தான் கொஞ்சம் பிரச்சனை இருக்கும். செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். சில பேருக்கு சம்பளமும் வந்திருக்காது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பொறுமையை சோதிக்கக் கூடிய நாளாக அமையப்போகின்றது. நீங்கள் அமைதியாக தான் இருப்பீங்க. ஆனா வம்புக்கு இழுக்க நாலு பேர் காத்துக் கொண்டே இருப்பார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை கிடையாது. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அளவோடு ஜாக்கிரதையாக பார்த்து பழகுங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாளாக தான் அமையும். எல்லா வேலையும் சுறுசுறுப்பாக முடிக்க போறீங்க. சின்ன சின்ன பிரச்சனை வந்தால் கூட நண்பர்கள் உதவியாக உறுதுணையாக இருப்பார்கள். சொந்தத் தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்கவும். அதிக முதலீட்டை செய்யும் போது ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவும். மூன்றாவது நபரை முழுமையாக நம்ப கூடாது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். எதையோ இழந்தது போல தான் இருப்பீர்கள். சுறுசுறுப்பாக எந்த வேலையிலும் ஆர்வம் காட்ட முடியாது. ஆகவே புதிய முடிவு எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும்போது கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் பிரச்சனை உங்களுக்குத்தான். வருமானத்தை தரும் வேலை ரொம்ப ரொம்ப முக்கியம் என்பதை கவனத்தில் வையுங்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையின் தைரியமும் அதிகமாக இருக்கும். உங்களுடைய இலக்கை அடைந்தே ஆக வேண்டும் என்று விடா முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கான பலனும் உங்களுக்கு கிடைக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிக்கு உண்டான அர்த்தத்தை நீங்கள் இன்று தெரிந்து கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள் இது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான மன நிலை இருக்கும். கொஞ்சம் கவலை இருக்கும். கொஞ்சம் நிதி நிலைமை மோசமாகத்தான் இருக்கும். இருந்தாலும் உங்களுக்கு பெரிய அளவில் பிரச்சனை வராது. உங்கள் வேலைகளை, உங்கள் பிரச்சனைகளை சமாளிக்கும் அளவுக்கு மன தைரியத்தை குலதெய்வம் கொடுத்து விடும். குலதெய்வத்தை நினைத்து இன்றைய நாளை தொடங்கினால் சிறப்பு.