இன்று வக்ர பெயர்ச்சியடைந்த குரு… 12 ராசிகளின் சுப மற்றும் அசுப பலன்கள் இதோ! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

நேற்றைய தினம் குருபகவான் வக்ர நிலையினை அடைந்த நிலையில், 12 ராசிகளின் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

நவ கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடிய குரு பகவான், ஒருவரது ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்கள் பேரதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுவார்கள். கிரகங்கள் அவ்வப்போது தனது ராசியை மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது மேஷ ராசியில் இருக்கும் குரு வரும் 4ம் தேதி அதே ராசியில் வக்ர நிலையடைகின்றார். இதனால் சில ராசிகள் கஷ்டங்களை சந்திக்க உள்ளனர்.

குரு தனுசு மற்றும் மீனம் மற்றும் கடகம் ராசியில் அதிபதியாகும். குரு என்ற வியாழன் கிரகம் பின்னோக்கி செல்வதால், அனைத்து ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் சுப, அசுப பலன்கள் ஏற்படும். எனவே முழு ராசிபலனை தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்
கடின உழைப்பை செலுத்தி வேலையில் வெற்றியை பெறும் உங்களின் நிதி பிரச்சினைகள் விலகும். ஆனால் திருமண வாழ்க்கையிலும், ஆரோக்கியத்திலும் சில பிரச்சினைகள் ஏற்படும்.

ரிஷபம்
திடீர் ஆதாயங்கள் உண்டாவதுடன் புதிய முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். ஆனால் விவாதங்களில் விலகி இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

மிதுனம்
கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் சற்று கடினமாக இருப்பதுடன், பொறுமையுடன் செயல்பட வேண்டியதுடன், கடின உழைப்பும் அவசியம் ஆகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்குமாம்.

கடகம்
ஆரோக்கியத்தில் கவனம் எடுக்க வேண்டியுள்ள நீங்கள் சில பிரச்சினையை சந்திக்கலாம். எந்தவொரு வேலையை செய்யும் முன்பு கவனம் தேவை. பணத்தினை அதிகமாக செலவு செய்யாதீர்கள்.

சிம்மம்
பணியிடங்களில் யாரையும் நம்ப வேண்டாம்… தீங்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார பிரச்சினை, திருமண வாழ்வில் பிரச்சினை சந்திக்க இருப்பீர்கள்.

கன்னி
எதிரிகள் மீது ஆதிக்கம் செலுத்தும் நீங்கள், மன நிம்மதியுடன் இருப்பதுடன், உடல் நல பிரச்சினையை அவ்வப்போது சந்திப்பீர்கள். பணி செய்யும் இடத்திலும், திருமண வாழ்க்கையிலும் பிரச்சினை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

துலாம்
மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதுடன், நிதி அம்சம் பலவீனமாகவும் செய்கின்றது. முதலீடு செய்வதையும், பண பரிவர்த்தனையையும் தவிர்த்து ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிகம்
விவாதங்களில் விலகி இருக்க வேண்டிய இந்த நேரத்தில் புதிய வீடு, வாகனம் வாங்கும் அளவிற்கு நிதி அம்சம் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனமும் எடுக்க வேண்டிய நீங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு
மரியாதை, பதவி, கௌரவம் உயரும் இத்தருணத்தில் நிதி ஆதாயத்தை அடைவதுடன், வாழ்வில் சிரமத்தையும் சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமையுடன் இருக்கவும்.

மகரம்
ஆரோக்கியத்தில் கவனமும், குடும்ப வாழ்க்கை, பொருளாதார நிலையில் பிரச்சினை சந்திக்கும் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

கும்பம்
மற்றவர்களை நம்பும் முன்பு யோசிக்கவும். பதவி, கௌரவம் உயர்வதுடன், பொருாதாரத்தின் பக்கமும் சாதகமான சூழல் ஏற்படும், ஆரோக்கிய கவனம் வேண்டும்.

மீனம்
ஆன்மீக பணிகளில் ஈடுபட வாய்ப்பு கிடைப்பதுடன், புத்திசாலித்தனமாக பணத்தை செலவிடுங்கள். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு இது சாதகமாக இருக்குமாம். எதிரிகள் மீது வெற்றியும் கிடைக்கும்.