சனி பகவான் என்றலே அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஏனெனில் சனி பகவான் ஒருவரது நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ற பலனை தவறாமல் அளிப்பவர். இவரது கோபத்திற்கு ஆளானால் அரசனும் ஆண்டியாவான்.
அப்படிப்பட்ட சனி பகவான் நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவரது நிலை அல்லது இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். கும்ப ராசியில் பயணிக்கும் சனி பகவானால் மிகவும் மங்களகரமான கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த யோகமானது ஒருவரது வாழ்க்கையில் வெற்றியையும், முன்னேற்றத்தையும் தரக்கூடியது. அதுவும் சனி பகவான் தற்போது வக்ர நிலையில் கும்ப ராசியில் வலுபெற்று பயணித்து வருகிறார்.
இதனால் சனியின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறவுள்ளார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு சாப்பிட வேண்டும். அதே சமயம் ஜங்க் ஃபுட்டை தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வந்தால் உடனே மருத்துவரை அணுகவும். செய்யும் தொழில், செய்யும் வேலை எல்லாவற்றிலும் இன்று முன்னோக்கு நிறைந்த நாளாக தான் அமையும். திறமையின் வெளிப்பாட்டால் சில இடங்களில் பெயர் புகழ் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்க போகின்றது. பண கஷ்டம் இருக்காது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இறை வழிபாடு செய்து நேரத்தை கழிப்பீர்கள். அந்த கிருஷ்ண பரமாத்மாவின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. இன்று கிருஷ்ண ஜெயந்தி அல்லவா. வகை வகையான பலகாரங்களோடு குதூகலமாக நாளை கழிக்க போகிறீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். சொந்த தொழிலில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். யாரை நம்பியும் பொறுப்பை ஒப்படைக்க கூடாது.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். எல்லா வேலையையும் சரியாக செய்வோமா இல்லை ஏதாவது தடை வந்து விடுமோ என்ற பதட்டம் மனதில் இருக்கும். பிரச்சனை இல்லை. உங்களுக்கு எல்லாம் இன்று நன்மையாக தான் நடக்கும். பயத்தை தள்ளி வைத்துவிட்டு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரணையால் நல்லது மட்டுமே நடக்கும். சொந்த தொழிலில் சில எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் தேடிக் கொண்டிருந்த நல்ல வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது. முக்கியமான முடிவுகளை நாளை தள்ளிப் போட்டுக்கோங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்பட்டு, அடம் பிடித்து எந்த ஒரு வேலையையும் செய்யவே கூடாது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசௌகரியமான சூழ்நிலை நிலவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஆற அமர யோசித்து முடிவு எடுங்கள். கடினமான வார்த்தைகளை பேசவே கூடாது. முடிந்தால் மௌன விரதம் இருப்பது ரொம்பவும் சிறப்பு.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு மன நிம்மதி வேண்டுமா. சந்தோஷம் வேண்டுமா. எப்போதும் சிரித்துக் கொண்டே இன்றைய நாளை கடந்து செல்லுங்கள். கோடி ரூபாய் கொடுத்தால் கூட இந்த சந்தோஷம் உங்களுக்கு கிடைக்காது. கூடுமானவரை கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளவும். முன்கோபத்தை குறைத்து முகத்தில் சிரிப்பு இருந்தால் இன்றைய நாள் உங்களுக்கு வெல்லம் போல இனிக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் கூட பெருசாக தெரியும். முன்கோபம் அதிகமாக வரும். வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் குழப்பங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எல்லா விஷயத்தையும் நிதானம் தேவை. அவசரப்பட்டு எதுவும் செய்யாதீங்க. இன்று உங்களுடைய நிதானம் கடலளவு பெரியதாக இருக்க வேண்டும். கடுகளவு கூட கோபம் வரக்கூடாது. ஜாக்கிரதை.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யார் பணம் கேட்டாலும் கொடுக்காதீங்க. யாரிடமிருந்தும் நீங்கள் கைநீட்டி பணம் வாங்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து யாருக்காகவும் போட்டு முன் நிற்கக்கூடாது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். வாழ்க்கை துணையிடம் சண்டை போடாதீங்க. உங்களுடைய சந்தோசத்தை அது கெடுத்து விடும். வெறும் வாக்கு மட்டும் கொடுத்துவிட்டு, அதை நிறைவேற்றவில்லை என்றால் பிற்காலத்தில் உங்களை மதிக்க ஒரு ஜீவன் கூட இருக்காது. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெறும் வாய் சாதுரியத்தால் எதையும் சாதிக்க முடியாது. சொன்ன வாக்கை நிறைவேற்றுவதாக இருந்தால் மட்டும் பேசுவது நல்லது.