புதனின் அருளால் இன்று(07.09.2023) வெற்றிக்கு மேல் வெற்றி பெறும் ராசிகள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.

பொதுவாக நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய கிரக நிலையை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக அமையப் போகின்றது. நீங்கள் மனதில் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராத கடன் கூட வசூல் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. யார்கிட்டயாவது காசு வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தால் இன்று முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நடத்த முடியாமல் இருக்கும் வேலைகளை இன்று தொடங்கலாம். நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. குறிப்பாக வெளியில் இருக்கும் பிரச்சனைகளை குடும்பத்தில் உள்ளவர்களிடம் காட்டாதீங்க. மனைவி குழந்தைகளிடம் பொறுமையாக பேசுவது சந்தோஷத்தை அதிகப்படுத்தும். செலவை குறைக்க வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று புத்துணர்ச்சியான நாளாக இருக்க போகின்றது. எல்லா வேலையையும் சுறுசுறுப்பாக முடித்து விடுவீர்கள். குறிப்பாக வீட்டுப் பெண்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான ஐடியாக்களை கண்டுபிடித்து சந்தோஷம் அடைவீர்கள்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலையும் முடித்துவிட்டு நிம்மதியாக தூங்குவதற்கான நேரம் கிடைக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க போகிறீர்கள். வேலைக்கு செல்பவர்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதுமையான சிந்தனைகள் தோன்றும். எல்லா விஷயத்தையும் புது கண்ணோட்டத்தோடு பார்க்க போறீங்க. நிறைய விஷயங்கள் அதில் உங்களுக்கு அனுபவரீதியாக பாடங்களை கற்றுக் கொடுக்கும். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்க வேண்டும். சுப காரிய நிகழ்ச்சிகள் தொடங்குவதை நாளை தள்ளிப் போடவும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் அதிகரிக்கும். நீங்கள் செய்யக்கூடிய சில வேலைகளை கண்டு மேலதிகாரிகள் வியப்படைவார்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் குடும்ப விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளின் போக்கை கவனியுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று எல்லா விஷயமும் கொஞ்சம் தாமதமாக நடக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். மந்தமான சூழ்நிலையின் காரணமாக உடல் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான வேலைகளை நாளை தள்ளிப் போடுங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிகரமான நாளாக அமையப் போகின்றது. நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த சில காரியங்களை இன்று செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழி உறவு உங்களுக்கு உதவியாக இருக்கும். வராது என்று நினைத்த பணம் கூட இன்று வந்து சேரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சற்று தடுமாற்றம் நிறைந்த நாளாகத்தான் இருக்கப் போகின்றது. எந்த நேரத்தில் எந்த முடிவு எடுப்பது என்று தெரியாமல் சில தடுமாற்றம் இருக்கும். முக்கியமான முடிவுகளை நாளை தள்ளிப் போடுங்கள். சொந்த தொழிலில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். கடனுக்கு வியாபாரம் செய்வதை தவிர்க்கவும். விவசாயிகளுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக அமையும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் பெயர் புகழ் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். பிள்ளைகளினால் பெருமை ஏற்படும். தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமையும். நீண்ட நாள் முயற்சி செய்த காரியம் வெற்றி பெறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பண பற்றாக்குறை நீங்கும். செலவுக்கு தேவையான பணம் கையை வந்து சேரும். வீண் செலவை குறைப்பதும் சேமிப்பை அதிகப்படுத்துவதும் எதிர்காலத்திற்கு நல்லது.