அதிர்ஷ்டத்தை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா?- இன்றைய ராசிப்பலன்!

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இன்று எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபர் சொல்வதை கேட்டு எந்த ஒரு முடிவும் எடுக்காதீங்க. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவ்வளவு லாபம் கிடைக்கும், அவ்வளவு லாபம் கிடைக்கும் என்று யாராவது பேராசை காட்டினால் அதை நம்பி எந்த வேலையும் செய்யக்கூடாது. பெரிய அளவில் ஏமாற்றம் அடைவதற்கு இன்று வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எந்த கஷ்டமும் இருக்காது. உங்கள் வேலையை சந்தோஷமாக செய்து முடித்து விடுவீர்கள். சொந்தத் தொழிலில் தானாக வியாபாரம் நடக்கும். லாபம் மனநிறைவை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுகபோக வாழ்வு இன்று உங்களுக்கு. அனுபவித்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்களின் ஆதரவால் நன்மையை பெறுவீர்கள். வீட்டில் வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் முதலீட்டில் கவனம் இருக்க வேண்டும். கணக்கு வழக்குகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க கூடாது.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேலை சுமை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் சுறுசுறுப்பாக எல்லா வேலையும் சரியான நேரத்தில் முடிக்கக்கூடிய மன தைரியம் உங்களிடத்தில் இருக்கும். எவ்வளவு பெரிய சிக்கலான விஷயத்தையும் போன போக்கில் சரி செய்து விடுவீர்கள். அடுத்தவர்களின் பாராட்டு கிடைக்கும். சந்தோஷம் மனதில் நிலையாக தங்கும். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாட்களாக பிரிந்த நண்பர்களோ ஒரு உறவுகளோ உங்களை சந்திக்க வருவார்கள். மனது பெரு மகிழ்ச்சி அடையும். வேலை செய்யும் இடத்தில் நினைத்தபடி எல்லா வேலையும் நன்றாக நடக்கும். சொந்த தொழிலில் சுமுகமான போக்கு நிலவும். லாபம் சீராக கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். வராத கடன் தொகையை வசூல் செய்வதற்கு இது நல்ல நாள். பயன்படுத்திக்கோங்க. குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் பேச்சை மீண்டும் பேச தொடங்கலாம். தங்கம் வெள்ளி வாங்குவதற்கு இந்த நாள் உகந்தது. புதுசாக ஆடை எடுப்பவர்களும் எடுக்கலாம். இன்று புதுவரவு உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கெடுதல் செய்தவர்கள் கூட நன்மை செய்வார்கள். எதிரிகள் எல்லாம் நண்பர்களாக மாறுவார்கள். நீண்ட நாட்களாக இருந்த பகை விலகி நட்புறவு உண்டாகும். அது வேலை செய்யும் இடத்திலும் சரி, சொந்த பந்தத்திலும் சரி, இன்று உங்களுக்கு இருக்கக்கூடிய பகையானது விலகும். பகை விலகும் போது மனது நிம்மதி கிடைக்கும் பாருங்க, அதை நீங்க அனுபவித்து உணருங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லேசான மன குழப்பம் இருக்கும். நீங்கள் தெளிவாகவே இருந்தாலும் உங்களை குழப்பி விட நாலு பேர் வருவாங்க. எதுவாக இருந்தாலும் சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் வீட்டு பெரியவர்களை ஒன்றுக்கு பலமுறை ஆலோசனை செய்யுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. நிதானமாக இருக்க வேண்டும். முன் கோபப்படக்கூடாது. ரொம்பவும் முக்கியமான முடிவு என்றால் அதை நாளை தள்ளி போடவும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகுதே என்று ரத்த கண்ணீர் வரும். வேறு வழி கிடையாது. மிக மிக அத்தியாவசியமான தேவை என்றால் பணத்தை செலவு செய்துதான் ஆக வேண்டும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த முன் பகை விலகும். சொந்தத் தொழிலில் சக போட்டியாளர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் துணிச்சல் தேவை. எதுவாக இருந்தாலும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசுங்கள். கோழைத்தனமாக பின்தங்கி நிற்காதீங்க. சில விஷயங்களில் பேசினால் தான் முடிவு பிறக்கும். ஆகவே இன்று உங்களுக்கு தைரியம் மட்டும்தான் வெற்றியை கொடுக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானம் பெருகும். செலவை குறைக்க வேண்டும். கடன் வாங்கும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. இன்று கடனா வாங்கினால் திருப்பிக் கொடுப்பதில் சிரமம் இருக்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக அமையப் போகின்றது. எல்லா வேலையையும் முன்கூட்டியே முடித்து விடுவீர்கள். உடலளவில் சோர்வு வந்தாலும், சுறுசுறுப்பு உங்கள் மனதில் இருந்து போகாது. எப்படியாவது வெற்றி காண வேண்டும் என்ற உங்களுடைய குறிக்கோள் வாழ்க்கையின் முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும்.