சனி பகவான் என்றலே அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஏனெனில் சனி பகவான் ஒருவரது நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ற பலனை தவறாமல் அளிப்பவர். இவரது கோபத்திற்கு ஆளானால் அரசனும் ஆண்டியாவான்.
அப்படிப்பட்ட சனி பகவான் நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவரது நிலை அல்லது இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். கும்ப ராசியில் பயணிக்கும் சனி பகவானால் மிகவும் மங்களகரமான கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த யோகமானது ஒருவரது வாழ்க்கையில் வெற்றியையும், முன்னேற்றத்தையும் தரக்கூடியது. அதுவும் சனி பகவான் தற்போது வக்ர நிலையில் கும்ப ராசியில் வலுபெற்று பயணித்து வருகிறார்.
இதனால் சனியின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறவுள்ளார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வியப்பான சில நல்ல சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்களே எதிர்பார்க்காத உறவுகள், உங்கள் வீடு தேடி வந்து ஆச்சரியத்தை கொடுக்கும். அது உங்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. சுமூகமாக பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்கள் காசு கேட்டால் கொடுக்க கூடாது. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. மற்றபடி குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழிலில் இன்று புதிய யோசனைகளை முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவை இல்லாத சிந்தனை மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். எந்த வேலையிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. ஆனால் உங்களுடைய அன்றாட வேலைகளில் கூடுதல் கவனம் இல்லை என்றால் பிரச்சனை வந்துவிடும். ஆகவே மனதை ஒருநிலைப்படுத்த ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை 21 முறை சொல்லுங்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையும் குழப்பமும் நிறைய இருக்கும். எதிர்காலத்தை நினைத்து எப்போதும் கவலைப்பட கூடாது. இன்றைய நாளை நீங்கள் எப்படி பயன் உள்ளதாக மாற்றலாம் என்று சிந்தியுங்கள். செய்யும் வேலையில் ஆர்வத்தை காட்டினால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். இருக்கும் வேலையில் ப்ரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். நல்லது நடக்கக்கூடிய நாள் இது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரம் தவறி சாப்பாடு சாப்பிட கூடாது. அதே சமயம் ஜங் ஃபுட்டை தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவி கிடைக்கும். உறவுகளின் அருமையையும் நண்பர்களின் அருமையையும் புரிந்து கொள்வீர்கள். முன்கோபத்தை குறைக்க வேண்டும். உறவுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சொந்தத் தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அலட்சியமாக இருக்காதீங்க.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாளாக அமையப் போகின்றது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் எதிர்பாராத சொத்து உங்கள் கைக்கு வந்து சேரும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும் நாளாக அமையப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கிரீடமே சூட்டப் போகிறார்கள். அந்த அளவுக்கு பெயரும் புகழும் அந்தஸ்த்தும் கூடும். விவசாயிகளுக்கு என்று புதிய முயற்சிகள் கை கொடுக்கும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் உண்டு.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி போடாதீங்க. மருத்துவரை அணுகுங்கள். அலுவலகத்தில் வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். சொந்தத் தொழிலில் எப்போதும் போல லாபம் இருக்கும். பிரச்சினைகள் எதுவும் இருக்காது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்படும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். சொந்த தொழிலில் கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாராவது உங்கள் மனது புண்படும்படி பேசினால் அமைதியாக இருந்து கொள்ளுங்கள். எதிர்த்து சண்டை போடாதீங்க.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆதாயம் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய நல்ல மனிதர்கள், பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளலாம். எதிர்காலத்திற்கு நல்ல திட்டங்களை தீட்டக் கூடிய நாள் இது.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். அடுத்தவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை, சொல்வதற்கு முன்கூட்டியே முடித்து விடுவீர்கள். பாராட்டும் புகழும் உங்களுக்கு இன்று சரமாரியாக பொழிய போகின்றது. இன்ப வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் நிலை. அதே சமயம் குடும்ப உறவுகளையும் கொஞ்சம் கவனியுங்கள். வேலை ஒரு கண் என்றால், குடும்பம் மற்றொரு கண் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நடந்துக்க வேண்டும்.