எதிர்பாராத ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு தான்..! காத்திருக்கின்றது பேரதிர்ஷ்டம் : இன்றைய ராசிபலன்கள்

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அடையப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. நிதானத்தோடு எல்லா விஷயத்தையும் கையாளுங்கள். முன்கோபடக்கூடாது. முக்கியமான முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடவும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் சுப செலவு ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பு தொகையை, சேர்த்து வைக்க ஒரு முதலீட்டை செய்வீர்கள். குடும்பத்திற்கு நல்லது நடக்கும். குழந்தை மனைவிகளின் சந்தோஷத்திற்கு பிள்ளையார் சுழி போடுவீர்கள்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்க போகின்றது. எவ்வளவுதான் வேலை இருந்தாலும் அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, நிம்மதியாக தூங்கி உடல் ஆரோக்கியத்தை பார்க்க போறீங்க. குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்கும் இந்த நேரத்தில், மனது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தோடு ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வரவும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக தான் இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். ஓய்வு எடுக்க முடியாது. உடல் அசதி காரணமாக உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. நீங்கள் எதிர்பாராத சாப்பாடு, எதிர்பாராத விருந்தாளி, எதிர்பாராத உபசரிப்பு, சந்தோஷத்திற்கு அளவில்லை. குடும்பத்தோடு நேரத்தை கழிக்க போகிறீர்கள். சொந்த தொழிலோ, செய்யும் வேலையோ உங்கள் ஞாபகத்திற்கு வராது.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் விரும்பியதெல்லாம் நடக்கும். எதை ஆசைப்பட்டு நினைக்கிறீர்களோ அது உங்கள் கையை வந்து சேரும். அதற்காக கோடி ரூபாய் வேண்டும் என்று ஆசை படாதீங்க. புது துணி வாங்கணும், புது செருப்பு வாங்கணும், ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சின்ன சின்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் இன்னைக்கு வாங்கலாம். செலவுக்கு ஏற்ற பணமும் கையில் இருப்பு இருக்கும். சொந்தத் தொழிலில் நல்ல வருமானம் பெருகும் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நற்செய்தி வரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. தொலைபேசியின் மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் இமெயிலின் மூலமாகவோ நல்ல செய்தியை பெறப் போகிறீர்கள். மனது சந்தோஷம் பெறும். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகிறது. சண்டே வாக இருந்தாலும் எல்லா வேலையையும் முடித்துவிட்டு நிம்மதியாக இருக்கப் போறீங்க. வீட்டை சுத்தம் செய்வது, வண்டியை பராமரிப்பது, போன்ற பழுது பார்க்கும் வேலைகளை செய்வதில் ஆர்வம் இருக்கும். விட்டுப்போன சின்ன சின்ன வேலைகள் எல்லாம் கூட இன்று சரியாகிவிடும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சில எரிச்சல் ஊட்டும் சம்பவங்கள் நடக்கும். பிடிக்கவே பிடிக்காது என்பவர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்து உங்களை தூங்க விடாமல் மொக்கை போடுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. உஷாரா இருந்துக்கோங்க. அனாவசியமா அடுத்தவன் பிரச்சனையில் மூக்கை நுழைக்காதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு இருந்தால் இந்த சண்டே தப்பித்தது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத டென்ஷன் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். முக்கியமான வேலைகளை முடிக்கக்கூடிய கடமைகள் காத்துக் கொண்டிருக்கும். ஆகவே ஞாயிற்றுக்கிழமை ஒரு வேலை செய்யும் நாள் போலவே உங்களை கடந்து செல்ல போகின்றது. கவலை வேண்டாம் ஆனால் எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும். கொஞ்சம் சிரமப்படாமல் வேலைகளை முடித்து விடுங்கள். திங்கட்கிழமை வார தொடக்க நாள் இனிமையாக அமையும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். சொந்த தொழிலில் எதிர்பார்க்காத நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கடையை ஒற்றுமை அதிகரிக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் நிறைந்த நாள் இதோ.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. சந்தோஷமாக கைபேசி தொலைக்காட்சி என்று நேரத்தை செலவழிக்க போகிறீர்கள். குழந்தையுடன் மனைவியுடன் சந்தோஷமாக வீட்டிலேயே இருக்கப் போகிறீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நல்ல கனவு வரும். என்ஜாய் பண்ணி சண்டேவை ஓட்டிடலாம்.