புதனும், சனியும் நேருக்கு நேர் இருப்பதால் இந்த 4 ராசிக்காரர்களுக்கும் அதிஷ்டமானதாக இருக்க போகுதாம்! தொட்டது எல்லாம் பொன்னாகும் ராசிகள்!

கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர வக்ர நிலையிலும் இன்னும் சில சமயங்களில் நேருக்கு நேர் பயணிக்கவும் செய்கின்றன. இப்படி கிரக மாற்றங்களால் மட்டுமின்றி கிரகங்களின் நிலைகளினாலும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கம் ஏற்படக்கூடும். அந்த வகையில் புதனும், சனியும் நேருக்கு நேர் பயணிக்கின்றன. அதாவது இவ்விரு கிரகங்களும் 7 ஆம் பார்வையில் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பயணிக்கின்றன.

இதன் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். சில ராசிக்காரர்களுக்கு இந்நிலையானது அதிர்ஷ்டத்தை வழங்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் பல வெற்றிகளை வழங்கும். சில ராசிக்காரர்களுக்கு இந்நிலையானது அதிர்ஷ்டத்தை வழங்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் பல வெற்றிகளை வழங்கும்.

மேஷம்

மேஷ ராசியில் புதனும் சனியும் சிறப்பான நிலையில் உள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் வெற்றி பெறும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். குழந்தைகளால் சந்தித்த பிரச்சனைகள் தீரும். சில முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.

மிதுனம்

சனியும், புதனும் நேருக்கு நேர் பயணிப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை வழங்கும். முக்கியமாக சனியின் அருளால் பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதனின் நிலையானது பல நன்மைகளை வாரி வழங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களின் அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தாயாரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதனின் நிலையானது நன்மைகளை வழங்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபத்துடன் முன்னேற்றத்தையும் காண்பார்கள். குறிப்பாக இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.