இன்றிலிருந்து ஆரம்பிக்கும் சூரிய நட்சத்திர பெயர்ச்சி: பிரகாசமாக ஜொலிக்கும் 3 ராசிக்காரர்கள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றமும் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும். ஒரு கிரகமானது ராசியை மாற்றும் போது அந்த மாற்றம் 12 ராசிகளிலும் காணலாம்.

இந்த கிரக மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கின்றது. அந்தவகையில், நவக்கிரகங்களின் தலைவாக இருக்கும் சூரியன் தன் சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சூரியன் தன் சொந்த நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தில் செல்லவிருக்கிறார். அந்தவகையில், இன்று நிகழும் இந்த பெயர்ச்சியின் தாக்கம் 3 ராசிகளை தாக்கவிருக்கிறது. அந்த 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த சூரிய நட்சத்திர பெயர்ச்சியால் இவர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். இவர்களுக்கு குழந்தைகள் மூலம் நற்செய்திகள் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். காதலிப்பவர்களும் எவ்வித தடையும் இன்றி திருமணம் நடக்கும், நிதிப் பிரச்சினைகள் குறைவில்லாமல் இருக்கும்.

சிம்மம்
சிம்மராசிக்காரர்களுக்கு சூரியன் அதிபதியாக இருப்பதால் இந்தக் காலம் உங்களுக்கு மங்களகரமாக இருக்கும். எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பீர்கள். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

விருச்சிகம்
சூரிய நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அரசாங்க வேலைக் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றிக் கிடைக்கும். இந்தக் காலத்தில் நீங்கள் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள்.