விநாயகர் சதுர்த்தியில் சிலை வாங்க போறிங்களா? அப்போ இந்த வாஸ்து டிப்ஸ் உங்களுக்காக

இன்று இந்து மக்களால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகின்றது. விநாயகப் பெருமான் அனைத்து தடைகளையும் நீக்கி ஞானத்தைக் கொடுப்பவர்.

இவரை தினமும் மனதில் நிறுத்தி வணங்கி வந்தால் வாழ்க்கை வளம் பெறும் என்று ஒரு ஐதீகம். அதுபோல வீட்டில் விநாயகரை வைத்து வழிபட்டால் வீட்டில் இருக்கும் அனைத்து எதிர்மறை சக்திகளும் விலகி வீடும் செழிப்பாக இருக்கும்.

அந்தவகையில் விநாயகர் சிலைகளை வீட்டில் கொண்டு வந்து வைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

  • வீட்டில் விநாயகர் சிலையை கொண்டு வந்து வைக்கும் போது அவர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலை தான் கொண்டு வரவேண்டும்.
  • விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும். விநாயகரின் தும்பிக்கை வீட்டிற்கு நேர்மறையைக் கொண்டு வரும். மேலும், தும்பிக்கை இடது பக்கம் சற்று சாய்ந்த வண்ணம் இருக்க வேண்டும்.
  • நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அல்லது மேசையில் விநாயகர் சிலையை வைத்தால் அது நேர்மறை ஆற்றலை கொண்டு வந்து உற்சாகத்தைக் கொடுக்கும்.
  • வாஸ்துபடி வேப்ப மரம் அல்லது ஆலமரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் துரதிஷ்டம் நீங்கும்.
  • வெள்ளை மற்றும் மஞ்சள் விநாயகரை வீட்டில் வைத்தால் அதிஷ்டத்தைக் கொடுக்கும்.
  • வெள்ளி விநாயகரை வைத்தால் உங்களுக்கு அதிக புகழ் வந்து சேரும்.
  • மரத்தில் செய்யப்பட்ட விநாயகரை வைத்தால் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
  • பித்தளையிலான விநாயகரை வைத்தால் அது நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.