ஜோதிட பஞ்சாங்கத்தின் படி தேவ குரு வியாழன் செப்டம்பர் 4ம் தேதி மேஷ ராசியில் வக்ரபெயர்ச்சி அடைந்துள்ள நிலையில், சாதகமான பலனையும், எதிர்மறையான பலனையும் அடையும் ராசியைக் இங்கு தெரிந்துகொள்வோம்.
12 ஆண்டுகளுக்கு பின்பு நிகழும் இந்த அற்புத நிகழ்வினால், குரு சுமார் நான்கு மாதங்கள் இந்த திசையிலிருந்து டிசம்பர் 31ம் தேதி வரை வக்ர நிவர்த்தியடைவார். இதனால் 5 ராசிகளுக்கு அபரீமிதமான பலனை தருவார்.
மேஷம்
இந்த வக்ர பெயர்ச்சியில் பின்னோக்கி பயணிப்பதால், உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும், தொழிலில் வெற்றியை பெறுவதுடன், உத்தியோகத்தில் இருப்பவர்களும் பதவி உயர்வை அடைவார்கள். திடீர் நிதி ஆதாயத்தையும் அடைவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் ஒன்பதாம் வீட்டில் குரு பயணிக்கும் நிலையில், நிலம், கட்டிடம் ஆகியவற்றில் லாபம் ஏற்படுவதுடன், நிதி நிலைமையும் வலுவடையும்.
துலாம்
வியாழன் என்று அழைக்கப்படும் குரு பகவான் உங்களது ராசியில் ஏழாவது இடத்தில் சஞ்சரிப்பதால் வணிக லாபத்தை பெறுவதுடன், வருமானத்துடன் செலவுகளும் அதிகமாகும். குடும்ப வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருந்து வரும் நிலையில், கூட்டுப் பணிகளில் நல்ல பணப்பலன்களை பெறுவீர்கள்.
தனுசு:
தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும் வியாழன் கிரகம் பின்னோக்கி செல்வது தனுசு ராசிக்கு மங்களரமானதாகக் கருதப்படுகின்றது. முடியாமல் இருந்த வேலை முடிவதுடன், தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன் ஏற்படுவதுடன், பெரிய வேலைகளில் பொறுப்பேற்கவும் செய்வீர்கள்.
மீனம்:
உங்கள் ராசியின் இரண்டாம் வீட்டில் வியாழனின் பிற்போக்கு இயக்கம் உங்கள் பேச்சு மற்றும் உறவுகளை மேம்படுத்தும். பொருளாதார ரீதியாக பலன் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றமும், வியாபாரத்தில் லாபமும் உண்டாகும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும்.