2023 நவராத்திரி: எப்போது தொடங்குகிறது? இந்த பொருட்களை வாங்கினால் நல்லது!

தெய்வீகப் பெண்தன்மையைக் கொண்டாடும் நவராத்திரி விரதமானது வருகின்ற அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24 வரை நடைபெறவுள்ளது.

இந்த நாளில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் மற்றும் விரதத்தை அனுஷ்டிக்கும் முறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

2023 நவராத்திரி
நவராத்திரியானது உலகளவில் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்படும் ஒரு விரத முறை எனலாம்.

நவராத்திரி என்றால் “ஒன்பது இரவுகள்” என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது.

இதன்படி இவ்வருடம் சித்ரா நட்சத்திரம் அக்டோபர் 14ம் தேதி மாலை 4.24 மணிக்கு தொடங்கி அக்ரோபர் 15ம் தேதி மாலை 6.13 வரை இருக்கும். மறுபுறம், அபிஜீத் முஹுர்த்தம் அக்டோபர் 15 அன்று காலை 11.04 முதல் 11.50 வரை இருக்கும்.

அதனால் இந்த இரண்டு ஷரதியா நவராத்திரி அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24 வரை இருக்கும்.

விரதம் இருக்கும் முறை
இந்த 9 நாட்களும் மக்கள் இடைவிடாத விரதம் இருகின்றார்கள். அவரவருக்கு ஏற்றார்போல விரதத்தை கடைபிடிக்கலாம். ஒரே ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள், நாள் முழுவதும் உபவாசம் இருப்பார்கள் மற்றும் அம்பாளுக்கு படைக்கும் நைவேத்தியம் மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள்.

இந்த காலத்தில் என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள முடியும்?
1. பழ வகைகள்
2. அவல், வெல்லம்
3. தேங்காய் மற்றும் வாழைப்பழம்
4. ஜவ்வரிசி
5. பயிறு வகைகள்
6. ராகி

தவிர்க்க வேண்டிய உணவுகள்

1. அதிக மசாலா
2. பூண்டு
3. வெங்காயம்
4. அரிசி
5. கோதுமை
6. எண்ணெயில் பொரித்த உணவுகள்

நவராத்திரியில் கலசத்தை வைப்பதற்கு முன்போ அல்லது முதல் நாளிலோ சில பொருட்களை வீட்டிற்கு வாங்கி வருவதன் மூலம் வீட்டிற்கு பல நன்மைகள் கிடைக்கும்.

அவ்வாறு நவராத்திரியின் போது வாங்க வேண்டிய மங்களகரமான பொருட்கள் என்னென்ன பற்றி பார்க்கலாம்.

1. துர்க்கை சிலை
2. துர்கா தேவியின் கால் தடங்கள்
3. பகவதியின் பிசா யந்திரம்
4. கலசம்
5. துர்க்கையின் முகம் பதித்த கொடி
6. திரிசூலம்
7. குங்குமம்

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்ககூடிய ஆரோக்கிய நடைமுறைகள்

1. நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை சாப்பிடலாம்
3. வேக வைத்த சுண்டல், பாதாம், முந்திரி, திராட்சை போன்றவற்றை சாப்பிடலாம்
4. நன்றாக தூங்க வேண்டும். விரதம் இருப்பது கொஞ்சம் சோர்வை ஏற்படுத்தும் என்பதால் தூக்கம் மிகவும் அவசியம்